
வாழ்வார் எதிராசர் ஆமிவர்கள் - வாழ்வாக
வந்துதித்த மாதங்கள் நாள்கள் தம்மின் வாசியையும்
இந்த உலகோர்க்கு உரைப்போம் யாம்
பெரியாழ்வாருடைய திருமகளாரான சூடிக்கொடுத்த நாச்சியாரும், மதுரகவி ஆழ்வாரும், ஸ்ரீ பாஷ்யகாரரும் ஆகிய இம்மூவரும் இவ்வுலகத்தில் உள்ளவர்கள் உஜ்ஜீவிப்பதர்க்காக வந்து அவதரித்தருளின மாசங்களையும், திருநக்ஷத்திரங்களையும் அவற்றின் வைபவங்களையும் இவ்வுலகத்தில் உள்ளவர்களுக்கு நாம் சொல்லக்கடவோம்.