கற்றினம் மேய்த்துக் கனிக்கொரு கன்றினை
பற்றி எறிந்த பரமன் திருமுடி
உற்றன பேசி நீ ஓடித் திரியாதே
அற்றைக்கு வந்து குழல் வாராய் அக்காக்காய்!
ஆழியான் தன் குழல் வாராய் அக்காக்காய்!
பொருள்: காகமே! கன்று மேய்த்த கண்ணன், அதே போல் போலியாக கன்று வடிவில் வந்த அசுரனை வீசியெறிந்து கொன்றான். அத்தகு பெருமை மிக்கவனின் முடியை வார வருவாயாக. சக்கரம் ஏந்தி நிற்கும் அப்பெருமானின் கூந்தலை வார வருவாயாக. தேவையில்லாமல் கரைந்து கொண்டு அங்குமிங்கும் அலையாதே!