Announcement

Collapse
No announcement yet.

நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெரியாழ்வார் பா

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெரியாழ்வார் பா

    பள்ளத்தில் மேயும் பறவை உருக்கொண்டு
    கள்ள அசுரன் வருவானைத் தான் கண்டு
    புள் இது என்று பொதுக்கோ வாய் கீண்டிட்ட
    பிள்ளையை வந்து குழல் வாராய் அக்காக்காய்!
    பேய்முலை உண்டான் குழல் வாராய் அக்காக்காய்!
    பொருள்: காகமே! நீர்நிலையில் இரை தேடித் திரியும் பறவை வடிவில் வந்த வஞ்சகம் மிக்க பகாசுரனின் வாயைப் பிளந்து கொன்றான் எங்கள் கண்ணன். அப்பிள்ளையின் தலையை வார வருவாயாக! அரக்கியான பூதனையின் பாலைக் குடித்த அப்பெருமானின் குழலினை வார வருவாயாக.
Working...
X