Announcement

Collapse
No announcement yet.

நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெரியாழ்வார் பா

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெரியாழ்வார் பா

    கறந்த நற்பாலும் தயிரும்
    கடைந்து உறிமேல் வைத்த வெண்ணெய்
    பிறந்ததுவே முதலாகப்
    பெற்று அறியேன் எம்பிரானே
    சிறந்த நற்றாய் அலர் தூற்றும்
    என்பதனால் பிறர் முன்னே
    மறைந்தும் உரையாட மாட்டேன்
    மஞ்சனம் ஆட நீ வாராய்.
    பொருள்: கறந்த பாலையும், தயிரையும், தயிரைக் கடைந்து உறிமேல் வைத்திருக்கும் வெண்ணெயையும் பிறந்ததில் இருந்து நீ உண்பதை நான் பார்த்ததே இல்லை. பெற்றதாயே பிள்ளையைப் பழிக்கிறாள் என்றால் ""இவன் எவ்வளவு குறும்பு செய்பவனாக இருப்பான்?'' என்று ஊர் மக்கள் உன்னைக் குறை சொல்வார்களே என்ற பயத்தால், மற்றவர் முன்னிலையில் ஒருபோதும் உன்னைக் குறை சொல்ல மாட்டேன். உடனே நீராட, நீ வருவாயாக.
Working...
X