Announcement

Collapse
No announcement yet.

நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெரியாழ்வார் பா

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெரியாழ்வார் பா

    கன்றுகள் ஓடச் செவியில்
    கட்டெறும்பு பிடித்து இட்டால்
    தென்றிக் கெடுமாகில் வெண்ணெய்
    திரட்டி விழுங்குமா காண்பன்!
    நின்ற மரா மரம் சாய்த்தாய்
    நீ பிறந்த திருவோணம்
    இன்று நீ நீராட வேண்டும்
    எம்பிரான் ஓடாதே வாராய்.
    பொருள்: கன்றுகள் மிரள, காதில் கட்டெறும்புகளைப் பிடித்துப் போட்டால் அவை கண்டுபிடிக்க முடியாதபடி எங்காவது ஓடிவிடும். அதன்பின் எப்படி நீ வெண்ணெய் எப்படி தின்கிறாய் என்று பார்க்கிறேன். ரிஷ்யமுக பர்வதத்தில் நின்ற ஏழு மராமரங்களைச் சாய்த்தவனே! வீரமிக்க கண்ணனே! நீ பிறந்த திருவோண நன்னாளான இன்று நீராட வா. என் இறைவனே! எங்கும் ஓடாமல் வருவாயாக.
    விளக்கம்: திருவோணம் பெருமாளின் ஜென்மநட்சத்திரம் என்று இப்பாடல் மூலம் அரிய தகவல் ஒன்றைத் தருகிறார் பெரியாழ்வார்.
Working...
X