மண்ணில் பிறந்த மண்ணாகும்
மானிடப்பேரிட்டு அங்கு
எண்ணமொன் றின்றியிருக்கும்
ஏழை மனிசர்காள்!
கண்ணுக் கினிய கருமுகில்
வண்ணன் நாமமே!
நண்ணுமின் நாரணன் தம் அன்னை
நரகம் புகாள்!
பொருள்: மண்ணோடு மண்ணாகப் போகும் மனிதர்களின் பெயர்களைக் குழந்தைகளுக்கு வைத்து மேலுலகவாழ்வை மறந்து வாழும் மனிதர்களே! நரகம் செல்லாமல் இருக்க வேண்டுமானால், கண்ணுக்கு இனியவனும், கரிய மேகம் போல நிறம் கொண்டவனும் ஆகிய நாராயணன் என்று குழந்தைக்கு பெயரிடுங்கள்.