வண நன்று உடைய வயிரக் கடிப்பிட்டு
வார் காது தாழப் பெருக்கி
குண நன்று உடையர் இக் கோபால பிள்ளைகள்
கோவிந்தா! நீ சொல்லுக் கொள்ளாய்
இணை நன்று அழகிய இக் கடிப்பு இட்டால்
இனிய பலாப்பழம் தந்து
சுண நன்று அணி முலை உண்ணத் தருவன் நான்
சோத்தம் பிரான்! இங்கே வாராய்.
பொருள்: நீண்ட காதுகளில் வைரக் கடிப்பு(காதணி) அணிந்திருக்கும் கோகுலத்தில் உள்ள நல்ல பிள்ளைகளெல்லாம், அம்மாவின் பேச்சை தட்டாமல் கேட்கிறார்கள். கோவிந்தா! நீ மட்டும் என் சொல்லைக் கேட்பதில்லை. நீயும் அழகான இந்தக் காதணியை அணிந்து கொள்ள இங்கே வா. உனக்கு பலாப்பழமும், பாலும் தருகிறேன். என் தெய்வமே! உன்னைக் கும்பிட்டு கேட்கிறேன். இங்கு வந்துவிடு.