Announcement

Collapse
No announcement yet.

நாலாயிரம் திவ்ய பிரபந்தம் பாடல் -260 - பெரியா&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நாலாயிரம் திவ்ய பிரபந்தம் பாடல் -260 - பெரியா&

    வையம் எல்லாம் பெறும் வார்கடல் வாழும்
    மகரக்குழை கொண்டு வைத்தேன்
    வெய்யவே காதில் திரியை இடுவன் நீ
    வேண்டியது எல்லாம் தருவன்
    உய்ய இவ்வாயர் குலத்தினில் தோன்றிய
    ஒண் சுடர் ஆயர் கொழுந்தே!
    மையன்மை செய்து இள ஆய்ச்சியர் உள்ளத்து மாதவனே! இங்கே வாராய்.
    பொருள்: நற்கதி தருபவனே! ஆயர்குலத்தின் ஒளிவிளக்கே! உலகையே விலையாகக் கொடுத்தாலும் பெற இயலாததும், கடலில் வாழும் மகரமீன் போல வடிவம் கொண்டதுமான காதணியைக் கொண்டு வந்தேன். காதுகளில் இதமாக திரியைப் புகுத்தி தூய்மை செய்வேன். நீ கேட்டதெல்லாம் தருவேன். இளமையான கோபியரின் மனதில் நிறைந்த மாதவனே! இங்கே வா.
Working...
X