கொங்கை வன்கூனி சொற்கொண்டு குவலயத்
துங்கக் கரியும் பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற்கு அருளி வன்கான் அடை
அங்கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான்
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்.
பொருள்: கூனி என்று பெயர் பெற்ற மந்தரையின் பேச்சை கைகேயி கேட்டதன் விளைவாக, யானை, குதிரை, நாடு என்று அனைத்தையும் தம்பி பரதனுக்கு அளித்துவிட்டு கொடிய காட்டை அடைந்தவன் ராமன். அவன் கண்ணனாகப் பிறப்பெடுத்து வந்து, தன் கண்களால் பூச்சிகாட்டி பயமுறுத்துகிறான்! ஐயோ, பயமுறுத்துகிறான்!
குறிப்பு: குழந்தைகள் தாடி,மீசை வைத்துக் கொண்டு பெரியவர்களைப் பயமுறுத்தும் விளையாட்டே பூச்சிகாட்டுதல்.