செப்பு இள மென் முலைத் தேவகி நங்கைக்கு
சொப்படத் தோன்றித் தொறுப்பாடியோம் வைத்த
துப்பமும் பாலும் தயிரும் விழுங்கிய
அப்பன் வந்த அப்பூச்சி காட்டுகின்றான்
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்.
பொருள்: இளமையும் மென்மையும் கொண்ட தேவகிக்கு, தானே தெய்வம் என்பதை அறியும் விதத்தில் காட்சியளித்தான். ஆயர்பாடி பெண்களாகிய நாங்கள் சேமித்து வைத்த நெய், பால், தயிர் இவைகளை வாரி உண்டான். இப்பெருமை மிக்க அவன், பூச்சாண்டி காட்டி பயமுறுத்துகிறான். அம்மா! பூச்சாண்டி காட்டி பயமுறுத்துகிறான்.
விளக்கம்: குழந்தைகள் தாடி, மீசை ஒட்டிக் கொண்டு பெரியவர்களைப் பயமுறுத்தும் விளையாட்டு பூச்சி காட்டுதலாகும். பெரியவர்களும் அக்குழந்தைகளைக் கண்டு பயப்படுவது போல நடித்து மகிழ்வார்கள்.