Announcement

Collapse
No announcement yet.

நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடல் - 251 - பெரியாழ்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடல் - 251 - பெரியாழ்

    காயுநீர் புக்குக் கடம்பு ஏறிக் காளியன்
    தீய பணத்தில் சிலம்பு ஆர்க்கப் பாய்ந்து ஆடி
    வேயின் குழல் ஊதி வித்தகனாய் நின்ற
    ஆயன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்
    அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்.
    பொருள்: விஷநீர் நிறைந்த குளத்தில் பாய்ந்து, காளிங்கன் என்னும் பாம்பை அடக்கிய கண்ணனே! அதிக சப்தத்துடன் சிலம்புகள் ஒலிக்க நடனமாடியவனே! புல்லாங்குழல் இசைத்து இனிமை சேர்த்தவனே! பெருமை மிக்கவனே! நீ என்னை பூச்சி காட்டி என்னைப் பயமுறுத்துகிறாய். ஐயோ! பயமாக இருக்கிறதே!
    விளக்கம்: தாடி, மீசை ஒட்டிக் கொண்டு பெரியவர்களை, குழந்தைகள் பயமுறுத்தும் விளையாட்டு பூச்சி காட்டுதலாகும். பெரியவர்களும் அவர்களைக் கண்டு நடுங்குவது போல நடிப்பார்கள்.
Working...
X