Announcement

Collapse
No announcement yet.

நாலாயிரம் திவ்ய பிரபந்தம் பாடல் - 249 - பெரியா

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நாலாயிரம் திவ்ய பிரபந்தம் பாடல் - 249 - பெரியா

    மெச்சு ஊது சங்கம் இடத்தான் நல்வேய் ஊதி
    பொய்ச் சூதில் தோற்ற பொறை உடை மன்னர்க்காய்
    பத்து ஊர் பெறாது அன்று பாரதம் கை செய்த
    அத்தூதன் அப்பூச்சி காட்டுகின்றான்
    அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்.
    பொருள்: அனைவரும் பாராட்டும்படி ஊதுகின்ற சங்கினை இடக்கையில் ஏந்தியவன். புல்லாங்குழல் இசைப்பதில் வல்லவன். வஞ்சனை மிக்க சூதாட்டத்தில் தோல்வியுற்ற பொறுமைசாலிகளான பாண்டவர்க்குத் துணைநின்றவன். துரியோதனனிடம் அவர்களுக்காகப் பத்து ஊரையாவது தரும்படி வேண்டியவன். பாரதப்போரில் தூதனாக அவர்களுக்கு கைகொடுத்தவன். இப்பெருமை மிக்க கண்ணன் பூச்சாண்டி காட்டுகிறான். அம்மா! பயங்கரமாகப் பூச்சி காட்டுகிறான் பாருங்கள்!
    குறிப்பு: மீசை தாடி வைத்துக் கொண்டு பயமுறுத்தும் விளையாட்டு பூச்சி காட்டுவதாகும். கண்ணன் காட்டும் விளையாட்டைக் கண்டு மகிழும் யசோதையாக பெரியாழ்வார் இப்பாசுரத்தைப் பாடியுள்ளார்.
Working...
X