Announcement

Collapse
No announcement yet.

நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடல் 244 - பெரியாழ்&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடல் 244 - பெரியாழ்&#

    சத்திரம் ஏந்தித் தனியொரு மாணியாய்
    உத்திர வேதியில் நின்ற ஒருவனைக்
    கத்திரியர் காணக் காணி முற்றுங் கொண்ட
    பத்திர ஆகாரன் புறம் புல்குவான்
    பார் அளந்தான் என் புறம் புல்குவான்.
    பொருள்: வாமன அவதாரம் எடுத்து வந்த திருமால், மகாபலியின் யாகசாலைக்கு குடைஏந்தி தனியாக வந்தார். அரசர்கள் பலரும் காணும்படி உலகத்தை அளந்து தனதாக்கிக் கொண்டார். அப்பெருமான் என்னைமுதுகோடு சேர்த்து அணைத்துக் கொள்வாராக. உலகளந்த பெருமான் என் பின்னே வந்து அணைத்துக் கொள்வாராக.
Working...
X