Announcement

Collapse
No announcement yet.

நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடல் 241 - பெரியாழ்&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடல் 241 - பெரியாழ்&#

    கத்தத் கதித்துக் கிடந்த பெருஞ் செல்வம்
    ஒத்துப் பொருந்திக் கொண்டு உண்ணாது மண்ணாள்வான்
    கொத்துத் தலைவன் குடிகெடத் தோன்றிய
    அத்தன் வந்து என்னைப் புறம் புல்குவான்
    ஆயர்கள் ஏறு என் புறம் புல்குவான்.
    பொருள்:பாண்டவர்களுடன் சேர்ந்து ஆட்சிசெய்ய விரும்பாத கவுரவர்கள், தாங்கள் மட்டும் இப்பரந்த உலகத்தை ஆளவேண்டும் என்ற குறிக்கோளுடன் வஞ்சகமாக பெருஞ்செல்வத்தை அபகரித்தனர். அந்த கவுரவர்களின் தலைவனான துரியோதனன் குலத்தோடு அழியக் காரணமான அப்பனே! கண்ணா! ஆயர்குலத்தில் தோன்றிய காளையே! நீ என் முதுகோடு சேர்த்து அணைத்துக் கொள்வாயாக.
Working...
X