கிண்கிணி கட்டிக் கிறி கட்டிக் கையினில்
கங்கணம் இட்டுக் கழுத்தில் தொடர் கட்டி
தன் கணத்தாலே சதிரா நடந்து வந்து
என் கண்ணன் என்னைப் புறம் புல்குவான்
எம்பிரான் என்னைப் புறம் புல்குவான்
பொருள்:இடையில் சலங்கையும், கையில் கங்கணம் என்னும் வடமும், கழுத்தில் ஆரமும் அணிந்து நடைபழகுகிறான் என் கண்ணன். அந்த ஆபரணங்களெல்லாம் ஒலியெழுப்பி அசைய, என் முதுகின் பின்னால் வந்து என்னைக் கட்டிக் கொள்வான். என் தலைவனாகிய அவன் என் முதுகைச் சேர்த்து அணைத்துக் கொள்வான்.