கழல் மன்ன சூழக் கதிர் போல் விளங்கி
எழில் உற்று மீண்டே இருந்து உன்னை நோக்கும்
சுழலை பெரிது உடைத் துச்சோதனனை
அழல விழித்தானே! அச்சோ அச்சோ
ஆழி அம்கையனே! அச்சோ அச்சோ.
பொருள்:வீரக்கழலினை அணிந்த அரசர்கள் சூழ சூரியனைப் போல துரியோதனன் அரசவையில் வீற்றிருந்தான். கண்ணன் சபைக்கு வந்ததும்(யாரும் கண்ணனை மதிக்கக்கூடாது என்று துரியோதனன் கூறியிருந்தான்) முதலில் எழுந்தது அவன் தான். அவனை கனல் தெறிக்கும் கண்களால் ஒரு பார்வை பார்த்தவனே! சக்ராயுதத்தைக் கையில் தாங்கியவனே! என்னை வந்து அணைத்துக் கொள்வாயாக.