பஞ்சவர் தூதனாய்ப் பாரத கை செய்துநஞ்சு உமிழ நாகம் கிடந்த நல்பொய்கை புக்குஅஞ்சப் பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள்செய்தஅஞ்சன வண்ணனே! அச்சோ அச்சோஆயர் பெருமானே! அச்சோ அச்சோ.பொருள்: பஞ்சபாண்டவருக்காக தூது சென்றவனே! பாரதயுத்தத்தில் தர்மத்தின் கை ஓங்கச் செய்தவனே! பொய்கைக்குள் குதித்து, விஷம் உமிழும் நாகமான காளிங்கனின் மீது நடனமாடிய கருநீல மணிவண்ணனே! ஆயர்குலத்தின் தலைவனே! என்னை அணைத்துக் கொள்வாயாக.
Announcement
Collapse
No announcement yet.
நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடல் 232 - பெரியாழ்
Collapse