Announcement

Collapse
No announcement yet.

நாலாயிர திவ்ய பிரபந்தம் - பாடல் 231 - பெரியாழ்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நாலாயிர திவ்ய பிரபந்தம் - பாடல் 231 - பெரியாழ்

    செங்கமலப் பூவில் தேன் உண்ணும் வண்டே போல்
    பங்கிகள் வந்து உன் பவளவாய் மொய்ப்ப
    சங்குவில் வாள் தண்டு சக்கரம் ஏந்திய
    அங் கைகளாலே வந்து அச்சோ அச்சோ
    ஆரத் தழுவாய் அச்சோ அச்சோ.
    பொருள்: கண்ணா! செந்தாமரை மலரில் தேனைக் குடிக்க மொய்க்கும் வண்டுகள் போல, உன் கூந்தல் பவளச் செவ்வாயில் மொய்க்கும்படி நீண்டு வளர்ந்துள்ளது. பாஞ்சஜன்ய சங்கு, சாரங்க வில், நந்தக வாள், கவுமோதக தண்டு, சுதர்சன சக்கரம் ஆகியவை உனக்கு மேலும் அழகூட்டுகின்றன. வந்து ஆரத் தழுவிக் கொள்வாயாக. இவற்றை ஏந்திய அழகிய கைகளால் என்னை தழுவ ஓடி வா!
Working...
X