Announcement

Collapse
No announcement yet.

நாலாயிர திவ்ய பிரபந்தம் - பாடல் 229 - பெரியாழ்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நாலாயிர திவ்ய பிரபந்தம் - பாடல் 229 - பெரியாழ்

    ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய
    அஞ்சன வண்ணன் தன்னை
    தாயர் மகிழ ஒன்னார் தளரத்
    தளர்நடை நடந்ததனை
    வேயர் புகழ் விட்டு சித்தன் சீரால்
    விரித்தன உரைக்க வல்லார்
    மாயன் மணிவண்ணன் தாள் பணியும்
    மக்களைப் பெறுவர்களே.
    பொருள்: ஆயர்குலத்தில் வந்து அவதரித்த நீலமேனி வண்ணன் கண்ணனைக் கண்டு தாய்மார்கள் உள்ளம் மகிழ்ந்தனர். எதிரிகள் மனம் தளர்ந்து வருந்தினர். அக்கண்ணனின் தளர்நடை இட்ட காட்சியை வேயர் குலத்தில் பிறந்த விஷ்ணுசித்தரான பெரியாழ்வார் விரித்துரைத்த இப்பாடல்களை படிப்போர் கண்ணனின் திருவடிகளைப் போற்றும் நல்ல பக்தியுள்ள பிள்ளைகளைப் பெற்று வாழ்வர்.
Working...
X