Srimad Bhagavatam skanda 9 adhyaya 6,7 in tamil
Posted on May 15, 2019by knramesh
Courtesy: Smt.Dr.Saroja Ramanujam
ஸ்ரீமத்பாகவதம்- ஸ்கந்தம் 9- அத்தியாயம் 6
அத்தியாயம் 6
இக்ஷ்வாகுவின் பேரன் புரஞ்சயன் இவன் மஹா வீரன். அசுரர்களின் பட்டணங்களை ஜயித்ததால் புரஞ்சயன் என்றும் எருதின் திமிலிலிருந்துகொண்டு சண்டை செய்ததால் ககுத்ஸ்தன் என்றும் பெயர் ஏற்பட்டது.
.
இவனுக்கு ஐந்தாவது சந்ததியில் தோன்றியவன் யுவனாச்வன். இவனுக்கு பத்துத் தலைமுறைக்குப் பின் இன்னொரு யுவனாச்வன் அவனுடைய புதல்வன் மாந்தாதா. யுவனாச்வன் புத்ரகாமேஷ்டி யாகம் செய்கையில் இரவில் எழுந்து தாகம் எடுத்ததால் மந்திரித்த கலசத்தில் இருந்த தீர்த்தத்தை தெரியாமல் சாப்பிட்டுவிட்டான் .
அதன் வீரியத்தால் அவனுடைய விலாப்புறத்தைப் பிளந்து கொண்டு ஒரு குழந்தை தோன்றியது. அது பாலுக்காக அழும்போது இந்திரன் ‘அழாதே என்னை உணவளிப்பவனாகக் கொள் (மாம் தாதா) என்று தன் கட்டைவிரலை சுவைக்க கொடுத்து அதன் மூலம் அம்ருதததி அளித்தான் . அதனல் அவனுக்கு மாந்தாதா என்ற பெயர் ஏற்பட்டது.
மாந்தாதாவிற்கு 5௦ புதல்வியர். அவனுடைய மூன்று புதலவர்களில் ஒருவனான புருகுத்ஸனே ரகுவம்சத்தின் மூதாதையாவான்.
சௌபாரி என்ற முனிவர் நீரில் மூழ்கி தவம்செய்து வந்தார். அப்போது அவர் மீன்களின் கேளிக்கைகளைக் கண்டு இல்லறத்தில் ஆசை கொண்டார்.
அவர் மாந்தாதாவிடம் சென்று அவனுடைய பெண்களில் ஒருவரை மணம் செய்து கொடுக்கும்படி கேட்க, வயதானவராகவும் தவத்தினால் மெலிந்து கடுமையாக காணப்பட்ட அவரைப் பார்த்து மாந்தாதா ஸ்வயம்வரத்தில் பெண்ணைத் தேர்ந்தெடுக்குமாறு கூறினான்.
அவருடைய கோரிக்கையை மறுத்தால் சாபம் இடுவாரோ எனப்பயந்த மாந்தாதா எந்தப் பெண்ணும் அவரை விரும்பமாட்டாள் என்ற எண்ணத்தில் ஸ்வயம்வரத்தில் எந்தப்பெண் அவரை தேர்ந்தேடுக்கிறாளோ அவளை மணக்குமாறு கூறினான் அவன் எண்ணத்தை உணர்ந்த முனிவர் தன் தவ வலிமையால் அழகிய இளைஞனாக மாறினார். அதன் விளைவாக ஐம்பது கன்னியரும் அவரை விரும்பி மணம் புரிந்தனர்.
அவர் ஐம்பது உருக்கொண்டு அவர்களுடன் வெகு காலம் ரமித்தார் .ஆனாலும் த்ருப்தியுறாத அவர் மனம் தன் நிலையை எண்ணி வருந்தியது. தபஸ்வியான அவர் நீர்வாழும் ஜந்துக்களின் கூட்டுறவால் தவம் முற்றும் அழிந்ததை எண்ணித் துறவறம் பூண்டு வனம் சென்று கடுமையான தவம் அனுஷ்டித்து பரமாத்மாவுடன் கலந்தார்.
ஸ்ரீமத்பாகவதம்- ஸ்கந்தம் 9- அத்தியாயம் 7
அத்தியாயம் 7
மாந்தாதாவின் மகனான புருகுத்சனின் வம்சத்தில் தோன்றியவன் சத்யவ்ரதன். அவனே திரிசங்கு என்று பிரசித்தி பெற்றவன். குருவின் சாபத்தால் சண்டாளத் தன்மை அடைந்து விச்வாமித்ரரின் தவ வலிமையால் சரீரத்துடன் சுவர்க்கம் சென்று இந்திரனால் தள்ளப்பட்டு தலைகீழாக வீழ்கையில் பாதி வழியில் விச்வாமித்திரரால் நிறுத்தப்பட்டு இப்போதும் நக்ஷத்திர வடிவில் பிரகாசிக்கிறான்., இந்த சரித்திரம் ராமாயணத்தில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
இவனுடைய புதல்வன் பெரும் புகழ் பெற்ற ஹரிச்சந்திரன். அவன் பொருட்டு விசுவாமித்திரரும் வசிஷ்டரும் பறவை உருக்கொண்டு பலகாலம் சண்டையிடும்படி நேர்ந்தது.
புத்திர பாக்கியம் இல்லாத ஹரிச்சந்திரன் நாரதருபதேசத்தால் வருணனை சரண் அடைந்து புத்திரன் பிறந்தால் அவனை வருண யாகத்தில் வருணனுக்கே அர்ப்பணிப்பதாகக் கூறினான்.
அவன் புத்திரனான ரோஹிதன் இதை விரும்பாமல் காட்டுக்குச்சென்று தவம் புரிந்து திரும்புகையில் ரிசீகர் என்பவருடைய நடுப் புத்திரனான சுனச்சேபனை விலைக்கு வாங்கித் தனக்கு பதிலாக உபயோகிக்க விரும்பினான். யாகப்பசுவாக அவனைப் பிதாவிடம் கொடுத்தான்.
ஆனால் சுனச்சேபன் விச்வாமித்திரரைச் சரண் அடைந்ததால் காப்பாற்றப்பட்டான். இந்த சரித்திரம் பின்னால் வரும்.
ரோஹிதன் வம்சத்தில் வந்தவன் ஸகரன். அவனுடைய பௌத்திரன் திலீபன். திலீபனின் மகன் கங்கையை பூமிக்கு கொண்டுவந்த பகீரதன் ஆவான். இதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.,