OM Sri GURUPYONAMAHA,respectful PRANAMS to Sri kanchi MAHA periva
மரிசீ மகரிஷி அருளியுள்ள சம்மோஹன கிருஷ்ணர் தியான ஸ்லோகம்!
மரிசீ மகரிஷியால் நமக்குக் கிடைத்துள்ள இந்த அரிய சக்தி வாய்ந்த ஸ்லோகம் நிம்மதியற்ற குடும்பங்களில் மன நிம்மதியையும், மன நிறைவையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் சக்தி வாய்ந்த ஸ்லோகமாகும். அற்புதமான இந்த ஸ்லோகத்தை உலக மக்கள் நன்மை கருதியே மரிசீ மகரிஷி நமக்கு அளித்தருளியிருக்கிறார்.
–
காலையில் நீராடிய பின்பு மூன்று முறையும், இரவில் உறங்கப் போகும் முன்பு ஒரு முறையும் சொல்வது அளவற்ற நன்மையைத் தரும். முக்கியமாக, திருமணமான பெண்களுக்கு மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கையைத் தருவது இந்த ஸ்லோகம். திருமணமாகாத பெண்களுக்குத் திருமணத் தடைகள் நீங்கி நல்ல வரன் அமையும்.
–
ஸ்ரீமந் நாராயணீயத்திலும், ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணரைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. மரீசி இயற்றிய அந்த ஸ்லோகத்தை அர்த்தத்துடன் கீழே கொடுத்திருக்கிறோம்.
–
சம்மோஹன கிருஷ்ணர் தியான ஸ்லோகம்!
..................................................................
க்ருஷ்ணம் கமலபத்ராக்ஷம் திவ்யாபரண பூஷிதம்!
த்ரிபங்கி லலிதாகாரம் அதிஸுந்தர மோஹனம்!!
-
பாகம் தக்ஷிணம் புருஷம் அந்யத் ஸ்திரீ ரூபிணம் ததா!
ஸங்கம் சக்ரம் சாங்கு ஸஞ்ச புஷ்பபாணம்ச பங்கஜம்!!
–
இக்ஷீசாபம் வேணுவாத்யம்ச தாரயந்தம் புஜாஷ்டகை:!
ஸ்வேத கந்தானு லிப்தாங்கம் புஷ்ப வஸ்த்ர த்ரகுஜ்வலம்!!
–
சர்வ காமார்த்த சித்யர்த்தம் மோஹனம் க்ருஷ்ண மாஸ்ரயே!!
–
பொருள்:
தாமரை இதழ் போன்ற கண்களும், பலவிதமான திருவாபரணங்களைத் தரித்தவரும், அழகான வில் போல் வளைந்த திருமேனியும், அழகுக்கு அழகு சேர்க்கும் மன்மத ரூபமாகத் திகழ்பவரும், சரிபாதி புருஷாகார சரீரரும், சரிபாதி பெண்மையான சரீரமும், வலது நான்கு, இடது நான்கு கைகளில் – சங்கு, சக்கரம், அங்குசம், கரும்பு வில், புஷ்ப பாணம், தாமரை மலர், இரண்டு கைகளில் வேணு வாத்யம் (புல்லாங்குழல்) வாசித்தபடி சுகந்த சந்தன திரவியங்களைப் பூசிக் கொண்டும், பலவித மனோஹரமான புஷ்பங்களைத் தரித்தவரும், இன்னல் படும் மக்களை அனைத்து துன்பங்களிலிருந்தும் காப்பாற்றி இன்பத்தைத் தர வல்லவருமான மோஹனரூபமாக உள்ளத்தை வசீகரிக்கும் ஸ்ரீ கிருஷ்ணனைத் தியானிக்கிறேன்!
-
ஆதாரம்: Shri A.M.Rajagopalan (AMR) குமுதம் ஜோதிடம்
Sri kanchi MAHA periva THIRUVADIGAL CHARANAM
(This post is for sharing knowledge only, no intention to violate any copy rights )