Announcement

Collapse
No announcement yet.

ஸ்ரீமத்பாகவதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஸ்ரீமத்பாகவதம்

    Srimad Bhagavatam skanda 8 adhyaya 16,17 in tamil
    Courtesy: Smt.Dr.Saroja Ramanujam
    ரீமத்பாகவதம் - ஸ்கந்தம் 8-அத்தியாயம் 16/17


    அசுரர்களால் தேவலோகம் அபகரிக்கப்பட்டு தேவர்கள் துயருற்றபோது, அவர்களின் தாயாகிய அதிதி பரிதவித்தாள். அப்போது ஒரு சமயம் நீண்ட கால சமாதியில் இருந்த கச்யபர் அங்கு வந்தார். அவள் அவரிடம் தன் துக்கத்திற்குக் காரணம் என்னவென்று கூறி எவ்வாறு தேவர்கள் இழந்த ராஜ்ஜியத்தைத் திரும்பப் பெரும் உபாயத்தைக் கூறுமாறு வேண்டினாள். கச்யபர் அவளிடம் பயோ வ்ரதத்தை அனுஷ்டித்து ஹரியைப் பூஜிக்குமாறு கூறினார்.


    பயோ வ்ரதம் என்பது பங்குனி மாதம் சுக்லபக்ஷத்தில் பன்னிரண்டு நாட்கள் அனுசரிக்க வேண்டியதாகும். பகவானை பாலால் அபிஷேகம் செய்து ஆராதிக்க வேண்டும். இந்த வ்ரதத்தை அனுஷ்டிக்கும்போது பால் மட்டுமே உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். சுக்லபக்ஷ பிரதமையில் தொடங்கி த்ரயோதசி வரை இந்த வ்ரதத்தை அனுஷ்டித்த பிறகு குருவுக்கும் ரித்விக்குகளுக்கும் தக்ஷிணை கொடுத்து எல்லா குலத்தவருக்கும் பாகுபாடின்றி உணவளிக்க வேண்டும். அதற்குப்பிறகே பந்துக்களுடன் உணவருந்த வேண்டும்.


    அவ்வாறே அதிதியும் அந்த பயோவ்ரதத்தை நியமத்துடன் அனுஷ்டித்தாள். அதன் பின் பகவான் சங்கு சக்கரத்துடனும் கதையுடனும் பீதாம்பரம் அணிந்து அவள் முன் காட்சி அளித்தார். அவளுடைய வ்ரதத்தால் ப்ரீதியடைந்து தன்னுடைய அம்சமாக அவளிடம் காச்யபர் மூலம் தோன்றி தேவர்களைக் காப்பதாகக் கூறி இந்த ரகசியத்தை ஒருவருக்கும் கூறாமல் பாதுகாக்க வேண்டும் என்று கூறி மறைந்தார்.


    அடுத்து வாமனாவதாரம் வர்ணிக்கப்படுகிறது.
Working...
X