Srimad Bhagavatam skanda 8 adhyaya 12 in tamil
Courtesy: Smt.Dr.Saroja Ramanujam
ரீமத்பாகவதம் -ஸ்கந்தம் 8 அத்தியாயம் 12
அத்தியாயம் 12
ஹரியானவர் ஸ்திரீ வடிவில் அசுரர்களை வஞ்சித்து தேவர்களுக்கு அமிர்தத்தைக் கொடுத்ததைக் கேட்ட பரமசிவன் ரிஷபத்தில் ஏறி உமாதேவியுடன் பூத கணங்கள் சூழ மதுசூதனர் இருக்குமிடம் வந்தார்.
அங்கு வந்த அவர் ஹரியிடம் அவருடைய மோகினி அவதாரத்தைக் காண விரும்புவதாகக் கூறினார். அதக் காட்டுவதாகக் கூறிக்கொண்டே பகவான் அங்கிருந்து மறைந்தார்.
அதன் பின்னர் சிவன் ஒரு அழகான உத்யானவனத்தைக் கண்டார். அங்கு ப்ட்டாடைகளுடனும் மேகலையுடனும் பந்து விளையாடும் ஒரு சிறந்த ஸ்திரீயைக் கண்டார் . சற்று வெட்கியவள் போல் வெளிப்படாத புன் சிரிப்புடன் கூடிய அவளது கடைக்கண் பார்வையால் ஏமாற்றப்பட்ட மகாதேவன் தன்னருகில் உமாதேவியும் பூத கணங்களும் இருப்பதையும் மறந்தவராய் அவள் அருகில் செல்ல அவள் மரங்களிடை மறைந்து நிற்க மோகம் கொண்ட சிவன் அவளை இழுத்துத் தழுவினார் .
அதனால் அவர் வீரியம் நழுவியது. அப்போது அவரால் எரிக்கப்பட்ட மன்மதன் அவரைப் பழிவாங்க அவரிடம் தன் சக்தியைக் காட்டியது போல் இருந்தது.
அடுத்த கணம் சிவன் மாயையில் இருந்து விடுபட்டு புத்திக் கலக்கத்திலிருந்து மீண்டார். விஷ்ணுவின் மாயையைப் பற்றி நன்கு அறிந்ததனால் அவர் தனக்கு நடந்ததைப் பற்றி ஆச்சரியம் அடையவில்லை.
பகவான் தன் சுய ரூபத்தை அடைந்து சிவனிடம் அவரைத் தவிர வேறு யாராலும் தன் மாயையைக் கடக்க இயலாது என்று கூறி அவரைப் போற்ற, சிவனும் தன் கணங்களுடனும் உமையுடனும் அங்கிருந்து சென்றார். பிறகு அவர் உமாதேவியிடம் பின் வருமாறு கூறலுற்றார்
.
" பிறப்பற்றவரான் பரம புருஷனின் மாயையை நீ பார்த்தாயா? சித்திகளில் வல்லவனான நானே அம்மாயையால் என்னையும் அறியாமல் மயங்கினேன் என்றால் பிறரைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா"?'
இதையே பகவான் கீதையில் கூறுகிறார் .
தைவீ ஹ்யேஷாகுணமயீ மமமாயா துரத்யயா
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயம் ஏஷாம் தரந்தி தே (ப.கீ. 7.14)
இந்த முக்குணமான என் மாயை தெய்வசக்தி வாய்ந்தது. கடத்தற்கரியது. எவர்கள் என்னையே சரணடைகின்றார்களோ அவர்கள் இந்த மாயையைத் தாண்டுகிறார்கள்.
ஹரிஹரபுத்திரனாகிய சாஸ்தா ஹரியின் அழகும் ஹரனின் தவமும் ஒருங்கே அமையப் பெற்றவர் . அவரைப் பற்றி அப்பைய தீட்சிதர் சாதுர்யமாகக் கூறுகிறார்.
அம்பேதி கௌரீம் அஹம் ஆஹ்வயாமி
பத்ன்ய: பிது: மாதர ஏவ ஸர்வா:
கதம் து லக்ஷ்மீம் இதி சிந்தயந்தம்
சாஸ்தாரம் ஈடே ஸகலார்த்தசித்தயே
" பார்வதியை அம்மா என்று கூப்பிடலாம் . ஏனென்றால் பிதாவின் மனைவியர் யாவரும் மாத்ருஸ்தானத்தில் இருப்பவர்கள். ஆனால் என் மாதாவான விஷ்ணுவின் மனைவியான லக்ஷ்மியை என்னவென்று கூப்பிடுவது :"என்று யோசித்துக் கொண்டிருக்கிறாராம்!