Announcement

Collapse
No announcement yet.

ஸ்ரீமத்பாகவதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஸ்ரீமத்பாகவதம்

    Srimad Bhagavatam skanda 8 adhyaya 5 in tamil
    Courtesy: Smt.Dr.Saroja Ramanujam
    ஸ்ரீமத்பாகவதம் - ஸ்கந்தம் 8


    அத்தியாயம் 5


    ஐந்தாவது மன்வந்தரத்தில் துர்வாசர் இந்திரனுக்கு ஒரு பூமாலை கொடுக்க அதை அவன் ஐராவதத்தில் அமர்ந்தபடியே வாங்கி அதன் கழுத்தில் போட்டான். அது அந்த மாலையை காலில் போட்டு மிதித்து விட்டதனால் கோபம் கொண்ட துர்வாசரின் சாபத்தால் இந்திரன் பதவி இழந்தான்.


    இதை அறிந்த அசுரர்கள் தேவர்களுடன் போரிட்டனர். இதனால் பல தேவர்கள் உயிரிழக்க நேரிட்டது. இந்திரன் தோற்று ஓடவும் தேவர்கள் மேருமலை சென்று பிரம்மாவிடம் முறையிட்டனர்.


    பிரம்மா அவர்களிடம் இந்த பிரபஞ்சமே ஹரியின் சரீரம் ஆதலால் எவ்வாறு மரத்தின் வேரில் விடப்பட்ட நீரானது அதன் எல்லா பாகங்களுக்கும் செல்கின்றதோ அதுபோல ஹரியின் பூஜையானது எல்லா தேவதைகளையும் திருப்திப் படுத்துகிறது என்று கூறி, பகவான் ஹரியை பின் வருமாறு துதி செய்தார்.


    அவிக்ரியம் ஸத்யம் அனந்தம் ஆத்யம்
    குஹாசயம் நிஷ்கலம் அப்ரதர்க்யம்
    மனோஅக்ரயானம் வசஸா அனிருக்தம்
    நமாமஹே தேவவரம் வரேண்யம்


    சகலதேவர்களுக்கும் மேம்பட்டவரும், என்றும் மாறாதவரும், உண்மைப் பொருளும், ஆதி அந்தம் இல்லாதவரும் , ஹ்ருதயகுகைக்குள் இருப்பவரும், மாசற்றவரும், மனதிற்கும் முன் செல்பவரும், வாக்கால் அறிய முடியாதவரும், அதனால் புத்தியால் அறுதியிட்டுக் கூற முடியாதவரும், ஆன பகவானை வணங்குகிறோம்.


    'ஸத்யம் ஞானம் அனந்தம் ப்ரம்ம, 'யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ ,'( மனமும் வாக்கும் பிரம்மத்தைக் காணாமல் திரும்புகின்றன.) என்கிறது உபநிஷத்.)


    விபஸ்சிதம் பிராண மனோதியாத்மனம்
    அதேந்த்ரியாபாஸம் அநித்ரம் அவர்ணம்
    சாயாதபௌ யத்ர ந க்ருத்ரபக்ஷௌ
    தம் அக்ஷரம் கம் வியுகம் விராமஹே


    பிராணன், மனம் , புத்தி , ஆத்மா இவற்றின் மூலம் செயலாற்றுபவரும், அழிவற்றவரும் ஆகாயம் போல எங்கும் வியாபித்தவரும் , இந்த்ரியங்களை ஒளிரச்செய்பவரும் , நித்திரை, கனவு, ஆழ்ந்த உறக்கம் இவற்றிற்கு அப்பாற்பட்டவரும், உருவமற்றவரும், கழுகின் இரு இறக்கைகளைப் போன்ற , வெயில் , நிழல், போன்ற இருமையற்றவரும் ஆன பகவானை சரண் அடைகிறோம்.


    நமஸ்துப்யம் அனந்தாய துர்விதர்க்யாத்ம கர்மணே
    நிர்குணாய குணேசாய ஸத்வஸ்தாய ச ஸாம்ப்ரதம்


    அளவிறந்தவரும் அறியவொண்ணா செயலுடையவரும் , நிற்குணமானவரும், குணங்களுக்கு ஈஸ்வரனும், நிகழ்காலத்தில் ஸத்வத்தில் நிலைத்தவரும் ஆன உமக்கு நமஸ்காரம்.
Working...
X