Srimad Bhagavatam skanda 7 adhyaya 2 in tamil
Courtesy: Smt.Dr.Saroja Ramanujam
ஸ்ரீமத்பாகவதம் - ஸ்கந்தம் 7அத்தியாயம் 2
அத்தியாயம் 2
ஹிரண்யாக்ஷன் வராஹப்பெருமானால் கொல்லப்பட்டதைக் கண்ட ஹிரண்யகசிபு மிகுந்த கோபம் கொண்டு தேவர்களிடம் பக்ஷபாதத்தினால் வராஹமாக மாறி தன் சகோதரனைக் கொன்ற ஹரியைக் கொல்வதாக சபதம் கொண்டான்.
விஷ்ணு தர்ம உருக்கொண்டவர், யாகஸ்வரூபி ஆகையால் தபஸ் யாகம் வேதாத்யயனம் முதலியவை நடைபெறும் இடமெல்லாம் தன் அசுரரகளைக் கொண்டு அவைகளை அழித்துவிட ஆக்ஞாபித்தான்.
பிறகு தன் சகோதரனுடைய ஈமக்கடன்களை செய்து ஹிரண்யாக்ஷனுடைய மனைவி மக்களுக்கும் தாய் திதிக்கும் ஆறுதல் கூறினான். ஹிரண்ய கசிபு கூறியது.
" எதிரியுடன் போரிட்டு வீர மரணம் எய்தியவரைப் பற்றி வருந்தக்கூடாது. கர்மவசத்தால் ஒன்றாக சேருபவர் வழிப்போக்கர் கூட்டம் போல அவரவர் வழியில் பிரிகிறார்கள். ஆத்மா அழிவற்றது.
மாயையால் ஆத்மா தேகத்தில் பற்று கொள்கிறது. அழிவற்ற புருஷன் முக்குணங்களால் ஆன பிரகிருதியின் வசப்பட்டு தேகமே தான் என்று எண்ணுகிறான். அதனால் உறவினரிடம் பற்றும், விரோதிகளிடம் வெறுப்பும்,உண்டாகிறது. கர்ம பந்தத்தால் ஸம்சாரத்தில் சிக்கி பிறப்பு இறப்பு மற்றும் பல துக்கங்கள் ஏற்படுகின்றன. இதற்கு உதாரணமாக யமனுக்கும் இறந்த மனிதனின் உறவினர்களுக்கும் நடந்த ஒரு சம்பாஷணையைக் கூறுகிறேன்."
ஹிரண்யகசிபு கூறிய உபாக்யானம்
உசீனர தேசத்தின் அரசனான ஸுயக்ஞன் போரில் எதிரிகளால் கொல்லப்பட்டான். அவனுடைய உறவினர்கள் அவன் உடல் சின்னாபின்னமாக இருந்ததைக்கண்டு அவனுடைய மனைவிகள் பெருங்குரலிட்டு கதறினர். அவன் உடலை தகனம் செய்யவிடாமல் அவர்கள் தடுத்து அழுதுகொண்டிருக்கையில் யமன் ஒரு சிறுவன் வேடத்தில் அவர்களிடையே தோன்றினான்.
அவன் அவர்களிடம் அவர்கள் புலம்பிக்கொண்டிருப்பது வெறும் உடல் என்றும் ஆத்மா உடல் , பிராணன் இவற்றோடு சம்பந்தப்படும்வரைதான் சுகம் துக்கம் இவை என்றும், ஆத்மா அழிவற்றது, உடல்தான் அழிவது என்று உணர்ந்தோர் எதற்கும் வருத்தப்பட மாட்டார்கள் என்றும் கூறி ஒரு குலிங்க பறவையின் கதையைக் கூறினான்.
ஆணும் பெண்ணுமாக காட்டில் திரிந்த இரு குலிங்கப் பறவைகளில் பெண் பறவை ஒரு வேடனின் வலையில் சிக்கியது. ஆண் பறவை அதைச் சுற்றி வந்து பிரலாபித்தது. அப்போது மறைந்திருந்த அந்த வேடன் அம்பெறிந்து அதையும் கொன்று விட்டான். எல்லோரும் ஒருநாள் இறக்க வேண்டியதுதான். அதை உணராமல் தாங்கள் ஏதோ எப்போதும் இருக்கப்போவதாக எண்ணி இறந்தவர்க்காக அழுகிறார்கள்.
அதைக்கேட்ட அவர்கள் அந்தச்சிறுவன் உடனே மறைந்ததையும் கண்டு உண்மையை உணர்ந்து ஸுயக்ஞனின் ஈமக்ரியையை செய்தார்கள்.
இதைக் கூறிய ஹிரண்ய கசிபு அவர்களுக்கு நம்மவர் மற்றவர் என்பது ஒரு மாயை என்று அறிவுறுத்தினான். அதைக்கேட்ட திதியும் மற்றவர்களும் சமாதானம் அடைந்தார்கள்.
( இது ஆச்சரியமான ஒரு நிகழ்வு. இவ்வளவு பேசிய ஹிரண்யகசிபு தான் மட்டும் அதை உணராமல் விஷ்ணுவைக் கொல்வதற்கு தவம் செய்து வரங்களைப் பெற்றான் என்பது விந்தையாக உள்ளது. இது ச்மசான வைராக்யத்திற்கு ஒரு உதாரணம் போலும். அல்லது சாத்தான் வேதம் ஒதுவது போல இருக்கலாம்.)