Srimad Bhagavatam skanda 6 adhyaya 14/15 in tamil
Courtesy: Smt.Dr.Saroja Ramanujam
ஸ்ரீமத்பாகவதம்-ஸ்கந்தம் 6-அத்தியாயம் 14/15
அத்தியாயம் 14
சூரசேன தேசத்தில் சித்ரகேது என்ற பெயர்பெற்ற சக்கரவர்த்தி இருந்தான். அவனுக்கு எல்லா பாக்கியங்களும் இருந்தும் புத்திர பாக்கியம் இல்லை.
ஒரு சமயம் அங்கிரஸ் மகரிஷி அவன் அரண்மனைக்கு வந்தார். அவரை எதிர்கொண்டழைத்து முறைப்படி பூஜித்த சித்ரகேது தனக்கு புத்திரபாக்கியம் இல்லாததைக் கூறி அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைக் கூறுமாறு கேட்டான்.
பிரம்ம குமாரரான அங்கிரஸ் முனிவர் அவனிடம் கருணை கொண்டு அதற்கு வேண்டிய யாகத்தை செய்து அந்த பிரசாதத்தை அவனுடைய மூத்தவளும் சிறந்தவளும் ஆன க்ருதத்யுதி என்பவளுக்குக் கொடுத்தார்.
பின்னர் அவர் சித்ரகேதுவுக்கு சந்தோஷம் துக்கம் இரண்டையும் தருபவனான புத்திரன் உண்டாவான் என்று கூறிவிட்டுச்சென்றார். உரிய காலத்தில் சித்ரகேதுவுக்கு ஒரு மகன் பிறந்தான். சித்ரகேதுவும் மகன் பிறந்ததை மிக மகிழ்ச்சியுடன் ஏராளமாக தானம் அளித்துக் கொண்டாடினான்.
சித்ரகேதுவுக்கு மகன் மேல் அன்பு வளர வளர பிற மனைவிகளை அவன் அலட்சியம் செய்தான். அதனாலும் தங்களுக்கு புத்திர பாக்கியம் இல்லாததினாலும் மனவருத்தம் அடைந்த இதர மனைவிகள் க்ருதத்யுதியின் மேல் பொறாமை கொண்டு அந்தக் குழந்தைக்கு விஷம் கொடுக்க அந்தக் குழந்தை இறந்தது.
அரசனும் மனைவியும் மகன் இறந்த சோகம் தாளாமல் அரற்றி அழும்போது பரிஜனங்கள் , தேச மக்கள் அனைவரும் துக்கிக்க தேசமே களை இழந்து காணப்பட்டதைக் கண்டு நாரதரும் அங்கிரஸ் முனிவரும் அவதூதர்களைப் போன்ற உருவத்தில் அங்கு வந்தனர்.
அத்தியாயம் 15
இறந்த தன் மகனுக்கு பக்கத்தில் இன்னொரு சவம் போலக் கிடந்த சித்ரகேதுவைப் பார்த்து அந்த முனிவர்கள் கூறினர்.
"இந்தக் குழந்தை உனக்கு போன ஜன்மத்தில் சொந்தமா? இல்லை அடுத்த ஜன்மத்திலா? இன்னொரு ஜன்மத்தில் அவன் உனக்கு விரோதியாகக் கூட இருக்கலாம். நீயோ நானோ இந்த உருவத்தில் இதுவரை இருந்ததில்லை இனிமேல் இருக்கப்போவதும் இல்லை. "
இதனால் சற்றுத் தெளிந்த சித்ரகேது அவர்களை யார் என்று கேட்க, அங்கீரஸ் தங்களை வெளிப்படுத்திக்கொண்டு கூறினார்.
"நானும் நாரதரும் உன் நிலையைக் கண்டு உனக்கு ஞானம் அளிக்கவே வந்தோம். பகவானின் பக்தனான உனக்கு இந்த மனப்போக்கு ஒவ்வாதது. நான் முன்னம் வந்த போதே உனக்கு ஞானம் அளிக்க அவாக் கொண்டிருந்தபோதும் நீ மகனுக்காக ஏங்கியதால் உனக்கு உதவினேன். இப்போது நீ பற்றினால் வரும் துக்கத்தை உணர்ந்து கொண்டிருப்பாய்.
எல்லாவிதமான உலக உறவுகளும் பொருள்களும் முடிவில் துக்கத்தை விளைவிப்பவையே. ஏனெனில் எதுவும் இந்த உலகில் நிரந்தரம் இல்லை. ஆகவே உன் மனமயக்கத்தில் இருந்து விடுபட்டு ஆத்மா விசாரத்தில் ஈடுபடுவாயாக."
நாரதர் கூறினார்.
"என்னிடம் இருந்து ஏகாக்ர சிந்தையுடன் சங்கர்ஷண மந்திரத்தைக் கற்பாயாக. உன் தேஹாத்ம புத்தி மாறி உண்மை ஞானம் ஏற்படும்."
அடுத்து நாரதர் இறந்த ஜீவனை யோகபலத்தால் வரவழைத்து அதன் மூலம் சித்ரகேதுவுக்கு ஞானோபதேசம் செய்தது சொல்லப்படுகிறது