Announcement

Collapse
No announcement yet.

ஸ்ரீமத்பாகவதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஸ்ரீமத்பாகவதம்

    Srimad Bhagavatam skanda 5 adhyaya 26 in tamil
    Courtesy: Smt.Dr.Saroja Ramanujam
    ஸ்ரீமத்பாகவதம் - ஸ்கந்தம் 5
    அத்தியாயம் 26


    பரீக்ஷித் கேட்டார்.
    நரகங்கள் என்பவை தனிப்பட்ட இடங்களா ? அப்படியானால் இவை மூவுலகங்களுக்கும் அப்பால் உள்ளவையா அல்லது உள்ளே அடங்கினவையா? என்று கூற வேண்டுகிறேன்.


    சுகர் கூறியது.
    அவை மூவுலகங்களுக்கு உட்பட்டவையே. அங்கு பித்ருகணங்களின் அரசராகிய வைவஸ்வத பகவான் (யமன்) தமது பரிவாரங்களுடன் விளங்குகிறார். பகவானின் கட்டளையை மீறாதவராய் இறந்து போனவர்களில் தமது நாட்டுக்கு தமது புருஷர்களால் கொண்டுவரப் பட்டவர்களுக்கு அவரவர் பாவத்திற்கேற்ப தண்டனை விதிக்கிறார்.


    அடுத்து சுகர் எந்தெந்த பாவங்களுக்கு நரகம் வாய்க்கும் என்பதைக் கூறுகிறார்.


    எவன் பிறருடைய பொருளையும் மனைவியையும் அபகரிக்கிறானோ


    எவன் பிராணிகளுக்கு துரோகம் செய்து தன் குடும்பத்தை போஷிக்கிறானோ,


    எவன் கொடியவனாய் மிருகங்களையும் பறவைகளையும் அதர்ம வழியில் கொன்று புசிக்கிறானோ


    அரசனாகவோ அதிகாரபுருஷனாகவோ உள்ள எவன் நிரபராதிகளை தண்டிக்கிறானோ


    எவன் தனக்கு கிடைத்ததை பகிர்ந்துகொள்ளாமல் பஞ்ச யக்ஞம் செய்யாமல் புசிக்கிறானோ,


    எவர் டம்பத்திற்காக செய்யும் யாகங்களில் மிருகங்களை வதைக்கிறார்களோ


    எவன் பணக்காரன் என்ற கர்வத்தில் அஹங்காரம் கொண்டு பொருளை சேமித்து பூதம் காப்பதுபோல் காத்து எவரிடமும் சந்தேகம் கொண்டு சாந்தியற்று இருக்கிறானோ


    இவ்விதம் இன்னும் பல தீய செயல்களை செய்பவர்கள் எல்லோரும் முறையே அவரவர் பாபத்திற்கேற்ற நரகங்களுக்குச் செல்கிறார்கள்.
    தரும வழி செல்பவர் சுவர்க்கத்தை அடைகின்றனர். புண்ணிய பலன் தீர்ந்ததும் மீண்டும் இவ்வுலகில் பிறக்கின்றனர்.


    ஆகவே முக்தியை வேண்டுவோர் இவ்விதன்ம் பகவானுடைய ஸ்தூல சூக்ஷ்ம ரூபங்களை பற்றி கேட்டறிந்து புத்தியை சூக்ஷ்மத்தில் செலுத்தவேண்டும். இவ்வுலகமே பகவானுடைய ஸ்தூல சரீரம் ஆகும்.இதைப்பற்றி உமக்கு விளக்கம் இதுவரை அளிக்கப்பட்டது.


    ஸ்கந்தம் 5 முற்றிற்று.


    அடுத்து 6வது ஸ்கந்தத்தில் அஜாமிள உபாக்யானமும் தக்ஷ வம்சமும் விவரிக்கப்படுகிறது. அதற்கு அடுத்த ஸ்கந்தம் யாவரும் ஆவலுடன் எதிர்பார்க்கக்கூடிய ப்ரஹ்லாத சரித்திரம்
Working...
X