Announcement

Collapse
No announcement yet.

ஸ்ரீமத்பாகவதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஸ்ரீமத்பாகவதம்

    Srimad Bhagavatam skanda 4 adhyaya 28 in tamil
    Courtesy: Smt.Dr.Saroja Ramanujam
    ஸ்ரீமத்பாகவதம்- ஸ்கந்தம் 4 அத்தியாயம் 28


    யவன அரசனாகிய பயம் என்பவன் காலத்தின் புதல்வியான துர்பகாவுடனும் நோய் , கவலை முதலிய பரிவாரங்களுடனும் புரஞ்சனனின் பட்டணத்தை ஆக்ரமித்தான். ஒன்பது வாசல்களின் மூலமும் உட்புகுந்த சேனையுடன் நரையுடன் கூடிய வயோதிகம் என்னும் காலத்தின் புதல்வி புரஞ்சனனை முழுவதுமாக வசம் ஆக்கிக்கொண்டாள்.
    மாளிகை நாசமாவதையும்ம் உற்றார் உறவினர்களின் அலட்சியத்தையும் கண்டும் அவனை பற்று விடவில்லை. கடைசியில் மனமில்லாமலே அவன் அந்த இடத்தை விட்டு நீங்க வேண்டி வந்தது.


    பட்டணமும் தீக்கிரையாயிற்று. அதைக்காத்து வந்த நாகமும் செயலற்று நீங்கிற்று. அவனுக்கு மரணம் சம்பவித்தது. அப்போதும் அவன் தன் உண்மையான நண்பனை நினைக்கவில்லை. மனைவி மக்களைப்ற்றியே கவலை கொண்டு அந்த நினைவுடன் உயிரை விட்டான்.


    ( வயதான காலத்தில் பயம் , நோய் இவைகள் தேகத்தை ஆக்கிரமிக்கின்றன. கடும் துன்பத்தை அனுபவிக்கிறான். அப்போதும் பற்று விடுவதில்லை. தனக்கு மரணம் நெருங்கி விட்டது என்று தெரிந்தபோதும் தன் மனைவி மக்களைப் பற்றியே நினைந்து உயிரை விடுகிறான். அப்போதும் என்றும் ஒரே நண்பனான இறைவனை நினையாது அடுத்த பிறவி எடுக்கிறான்.)


    புரஞ்சனன் தன் மனைவியின் நினைவுடன் உயிரை விட்டதால் அடுத்த பிறவியில் விதர்ப நாட்டரசன் வீட்டில் ஒரு பெண்ணாகப் பிறந்தான். பிறகு மலையத்வஜ பாண்டியன் அவளை மணந்து கொண்டான். அவனுக்கு அவளிடத்தில் ஒரு அழகிய பெண்ணும், ஆறு புத்திரர்களும் உண்டாயினர்.அவர்கள் ஒவ்வொருவருக்கும் அனேக புத்திரர்கள் தோன்றினர்.


    ( பாண்டியன் என்பது பாகவதனைக் குறிக்கும். மலையத்வஜன் என்பது மலய பர்வதம் அதாவது தென்னாட்டின் பகுதியைக் குறிக்கும். அவன் மகள் பகவத் பக்தியில் ஈடுபாட்டையும் அவளுடைய ஆறு புதல்வர்கள் பக்தி மார்க்கத்தின் முறைகளையும் பாண்டிய நாடு என்பது பக்தியில் சிறந்த ஆழ்வார்களின் தோன்றப்போகும் இடத்தையும் குறிக்கும். கர்ம மார்கத்தையும் ஞானமார்கத்தையும் தவிர பக்தி மார்கத்தின் தோற்றம் இந்த வரலாறு மூலம் குறிப்பிடப்படுகிறது.)


    நாளடைவில் மலயத்வஜன் நாட்டை புதல்வர்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிட்டு பகவான் கிருஷ்ணரை ஆராதிப்பதற்காக குலாசலம் (இப்போதைய திருப்பதி) சென்றான். அவன் மனைவியும் அவனுடன் சென்று சுச்ரூஷை செய்தாள். ஒருசமயம் மஹாசமாதியில் ஆழ்ந்துவிட்ட மலையத்வஜன் பிரம்மத்துடன் கலந்துவிட்டதை அறியாமல் எப்போதும் போல பணிவிடை செய்கையில் அவர் பாதத்தை வணங்கும்போது அவர் உடலில் உயிரில்லாமையை உணர்ந்தாள். கதறிக் கண்ணீர் விட்டு சிதையடுக்கி அதில் உடன் கட்டை ஏற முயற்சிக்கையில் அங்கு ஒரு ஆத்மஞானியாகிய அந்தணர் அங்கு வந்து அவளைத் தேற்றிப் பின் வருமாறு கூறினார்.


    "உனக்கு என்னை நினைவிருக்கிறதா? என்னை விட்டு விட்டு இந்த்ரிய சுகத்தை நாடிச்சென்றது நினைவிருக்கிறதா? நீயும் நானும் அன்னங்களாக மானசரோவரில் ஆயிரம் வருடங்கள் ஒன்றாக இருந்தோம். நீர் விதர்பராஜன் மகளும் அன்று இந்த வீரர் உமது பதியும் அன்று. ஒன்பது வாசல் உள்ள புரியில் எவளுடன் ரமித்தீரோ அந்த புரஞ்சனனும் நீர் அன்று.


    உண்மையில் நீர் வேறு நான் வேறு அன்று. நமக்குள் காணப்படும் பேதம் கண்ணாடியில் பிம்பத்திற்கும் பிரதிபிம்பத்திற்கும் காணப்படும் பேதமேயாகும். எல்லாமே என்னுடைய மாயை." இவ்வாறு பரமஹம்சமான பகவானால் அறிவுறுத்தப்பட்ட ஜீவன் தன் நிலை உணர்ந்து அதிலிருந்து நழுவியதால் இழந்திருந்த நினைவை மீண்டும் பெற்றான்..


    பர்ஹிஷ்மானே , இந்த புரஞ்சனோபாக்யானம் உமக்கு அத்யாத்ம தத்துவத்தை உணர்த்தவே என்னால் கூறப்பட்டது " என்று நாரதர் கூற பர்ஹிஷ்மன் அதில் உள்ள தத்துவத்தை விளக்கும்படி கேட்டுக்கொண்டான். அடுத்து நாரதர் பக்தியின் மேன்மையை விளக்குகிறார்.
Working...
X