Srimad Bhagavatam adhyaya 24 skanda 3 in tamil
Courtesy:Smt.Dr.Saroja Ramanujam
ஸ்ரீமத்பாகவதம் -ஸ்கந்தம் 3- அத்தியாயம் 24
தேவஹூதியின் வேண்டுகோளுக்கு கர்தமர் பதில் கூறினார்.
" குற்றமற்றவளே, வருந்தாதே. பகவான் ஹரியானவன் உன் கருவில் சீக்கிரம் வரப்போகிறார். யமநியமங்களுடன் அவரை உபாசித்து வருவாயாக. அவ்விதம் ஆராதிக்கப்பட்ட பகவான் உன் வயிற்றில் பிறந்து உனக்கு பிரம்மோபதேசம் செய்து உன் தடைகளை நீக்குவார். என் புகழையும் வளர்ப்பார். "
பல நாட்கள் சென்றபிறகு பகவான் மதுசூதனர் தேவஹூதியின் கர்ப்பத்தில் கட்டையில் அக்னி பிரவேசித்தது போலத் தோன்றினார். அப்போது ஸரஸ்வதி நதிக்கரையிலுள்ள கர்தமர் ஆஸ்ரமத்திற்கு பிரம்மா மரீசி முதலிய ரிஷிகளுடன் வந்தார். அவர் கர்தமரிடம் தன் கட்டளையை நிறைவேற்றியதற்காக திருப்தியுற்று அவர் பெண்களை பிரஜாபதிகளுக்கு விவாகம் செய்து கொடுக்க வேண்டும் எனக்கூறினார். பிறகு தேவஹூதியிடம், ஹரியானவர் அவள் கர்பத்தில் புகுந்துள்ளார் என்றும் உலகத்தில் அறியாமையையும் அவநம்பிக்கையையும் போக்க அவதரித்து அவளுடைய அஞ்ஞானத்தையும் போக்குவார் என்றும் கூறினார்.
பிறகு கர்தமர் தன் பெண்களில் கலையை மரீசிக்கும், அனசூயையை அத்ரிக்கும் , ஸ்ரத்தையை அங்கிரசுக்கும், ஹவிர்புவை புலஸ்தியருக்கும் ,கதியை புலஹருக்கும் ,கிரியையை க்ரதுவுக்கும், க்யாதியை ப்ருகுவுக்கும் , வசிஷ்டருக்கு அருந்ததியையும், சாந்தியை அதர்வணருக்கும் கொடுத்தார்.
பகவான் அவதரித்ததும் கர்தமர் அவரை தனிமையில் அணுகி,
"யோகிகள் பல காலம் தியானம் செய்து அடைய முயற்சிக்கும் தங்கள் பக்தர்களை அனுக்ரஹிக்க இன்று க்ருஹஸ்தர்களாகிய எங்கள் வீட்டில் அவதரித்துள்ளீர்கள். உங்கள் தெய்வ வடிவை விட்டு மக்களுக்கு ஞானத்தை பரப்ப இன்று மானிட உருவம் கொண்டீர்கள். இன்று என் கடமை முடிந்ததாக எண்ணி நான் சன்யாசம் பெற்று என் ஹ்ருதயத்தில் உங்களை தியானம் செய்து கொண்டு சஞ்சரிக்க விரும்புகிறேன், "
அப்போது பகவான் கூறினார்.
"ஆத்மஞானத்தின் சூக்ஷ்மமார்கமான இந்த சாங்க்ய யோகம் வெகுகாலமாக மறைந்து விட்டது. அதை மீண்டும் வளர்க்கவே இந்த அவதாரம் எடுத்துள்ளேன். உமது விருப்பப்படி போகலாம். எல்லா கர்மங்களையும் எனக்கு அர்ப்பணித்து துறவறம் மேற்கொண்டு முக்தி அடைவீராக. என்தாயான தேவஹூதிக்கு ஞானத்தை அளிப்பேன். அவளும் சம்சாரத்தைக் கடந்து மேல் நிலையை அடைவாள். "
இவ்வாறு பகவானால் கூறப்பட்ட கர்தமர அவரை பிரதட்சிணம் செய்து வனம் ஏகினார். மௌன வ்ரதத்துடன் பற்று நீங்கியவராய் பகவானிடம் பக்தியுடன சஞ்சரித்து பரமபதம் எய்தினார்.