Announcement

Collapse
No announcement yet.

ஸ்ரீமத்பாகவதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஸ்ரீமத்பாகவதம்

    Srimad bhagavatam skanda 3 adhyaya 4 in tamil
    Courtesy:Smt.Dr.Saroja Ramanujam
    ஸ்ரீமத்பாகவதம்- ஸ்கந்தம் 3.அத்தியாயம் 4
    உத்தவர் கூறினார்.
    "யாதவகுலத்தின் அழிவை சங்கல்பித்த பகவானால் நான் பதரிகாச்ரமம் செல்லும்படி நியமிக்கப்பட்டேன். அவருடைய அபிப்பிராயத்தை தெரிந்து கொண்டபின்னும் அவரை விட்டுப்பிரிய மனமில்லாதவனாக அவரைத் தேடிச் சென்றேன். "
    அங்கு கிருஷ்ணரை எவ்விதம் கண்டார் என்று வர்ணிக்கிறார்.


    " அத்ராக்ஷம் ஏகம் ஆஸீனம் விசின்வன் தயிதம் பதிம்
    ஸ்ரீநிகேதம் ஸரஸ்வத்யாம் க்ருதகேதம் அகேதனம் ( ஸ்ரீமத் பாக. 3.4. 6)


    "அவரைத் தேடிக்கொண்டு போன நான் ஸ்ரீநிவாசனான என் மனதுக்கினிய பிரபு சரஸ்வதி நதிக்கரையில் தனிமையில் அம்ர்ந்திருக்கக்கண்டேன்."


    ச்யாமாவதாதம் விரஜம் பிரசாந்தாருணலோசனம்
    தோர்பி: சதுர்பி: விதிதம் பீதகௌசாம்பரேண ச (3.4.7)
    நீலமேகச்யாமளன் பற்றற்று சாந்தமான சிறிதே சிவந்த கண்கள் , நான்கு புஜங்கள் பீதாபரம் இவைகளுடன்,


    வாம உரௌ அதிஸ்சித்ய தக்ஷிணாங்க்ரிசரோருஹம்
    அபாச்ரிதஅர்பகாச்வத்தம் அக்ருசம் த்யக்த பிப்பலம் (3.4.8)


    தாமரை போன்ற வலது பாதத்தை இடது துடைமேல் வைத்தவரும், இளம் அரசமரத்தில் சாய்ந்து உலக சுகங்களை விட்டவருமான ( அவரைக் கண்டேன்.)


    (நீல வண்ணப் பாதம் துடை மேல் வைத்த போது அதன் சிவந்த அடிப்பாகம் புறாவின் அடிப்பாகம் போல் காணப்பட்டது. இது வேடன் அடிக்க வாகாக பகவானே செய்த திருவிளையாடல்.)


    அச்சமயம் வியாசரின் ஆப்தநண்பரும், மஹாபாகவதரும் , சித்த புருஷரும் ஆன மைத்ரேயர் பகவத்சங்கல்பத்தால் அவ்விடம் வந்து சேர்ந்தார். அவர் பக்தியுடனும் ஆனந்தத்தினாலும் வணங்கி நிற்க பகவான் புன்சிரிப்புடன் கருணையே வடிவான கடாக்ஷத்தினால் என்னை நோக்கிக் கூறலுற்றார். "


    பகவான் கூறியது,
    "நான் உனது மனதில் அந்தரங்கமாக உள்ள ஆசையை அறிவேன். போன ஜன்மத்தில் வசுவாக இருந்து பிரஜாபதிகளாலும் வசுக்களாலும் செய்யப்பட்ட ஸத்திரயாகத்தில் என்னையே அடைய நீ என்னை பூஜித்தாய். அதன் காரணமாக என் நெருங்கிய நண்பனாக இந்தப்பிறவி உனக்கு ஏற்பட்டது. இதுதான் உன் கடைசிப்பிறவி.


    ஆழ்ந்த பக்தியின் காரணமாக நான் பூவுலகை விட்டுச்செல்லும் சமயம் என்னைக் காணும் பாக்கியத்தைப் பெற்றாய். பத்மகல்பத்தில் உலகை ஸ்ருஷ்டிக்கும் சமயம் இந்த மேலான உபதேசம் என்னால் பிரம்மாவுக்கு கூறப்பட்டது. புத்திமான்கள் இதை பாகவதம் என்பர். இதை உனக்குக் கூறுவேன் ." என்றுரைத்த பகவான் உத்தவருக்கு ஆத்மஞானத்தை உபதேசித்தார்.


    உத்தவர் விதுரரிடம் தான் பிறகு கனத்த இதயத்துடன் கிருஷ்ணரை வலம் வந்து விடைபெற்றதாகவும் கூறினார். அப்போது விதுரர் பகவான் அவருக்கு உபதேசித்த ஞானத்தை தனக்கும் கூறுமாறு கேட்கையில் உத்தவர் மைத்ரேயர் அங்கு வருவார் என்றும் அவர்தான் விதுரருக்கு உபதேசிக்க வேண்டும் என்பது பகவானின் சங்கல்பம் என்றும் கூறினார்.


    பிறகு இருவரும் பகவானின் லீலைகளைப் பற்றியே பேசி இரவைக் கழித்தனர். காலையில் உத்தவர் விடை பெற்றுக்கொண்டு பத்ரிகாச்ரமம் புறப்பட்டார்


    இந்த சமயம் பரீக்ஷித் குறுக்கிட்டு சுகரிடம் ஒரு கேள்வி கேட்டார். அது என்னவென்றால் யாதவகுலம் முழுவதும் அழிந்துபோகையில் உத்தவர் மட்டும் எப்படி தப்பித்தார் என்பது.


    இதற்கு சுகரின் பதில் என்னவென்றால், பகவான் இவ்வாறு சிந்தித்தார்.


    அஸ்மாத் லோகாத் உபரதே மயி ஞானம் மதாச்ரயம்
    அர்ஹதி உத்தவ ஏவாத்தா சம்ப்ரதி ஆத்மவதாம் வர3.4. 30)
    நான் இந்த உலகை விட்டு நீங்கியபோது, உத்தவர் மட்டுமே என்னைப்பற்றிய ஞானம் படைத்தவராக எஞ்சியிருப்பார்.


    ந உத்தவோ அண்வபி மன்ன்யூன: யத்குணைர்நாதித: ப்ரபு:
    அதோ மத்வ்யூனம் லோகம் க்ராஹயன் இஹ திஷ்டது. (3.4.31)
    உத்தவர் என்னைவிட அணுவளவும் குறைந்தவர் அல்ல. அதனால் நான் இல்லாத உலகில் அவர் இருந்து என்னைப்பற்றி மக்களுக்கு உபதேசிக்கட்டும்.


    உத்தவர் சென்ற பிறகு கிருஷ்ணரைப் பற்றியும் அவர் கருணையைப் பற்றியும் சிந்தித்து விதுரரின் சோகம் எல்லைமீறியதாகிவிட்டது. பிறகு விதுரர் யமுனையை விட்டு நீங்கி மைத்ரேயர் இருக்கும் கங்கைக்கரையை அடைந்தார்.

  • #2
    Re: ஸ்ரீமத்பாகவதம்

    Great Teaching!

    Comment

    Working...
    X