Announcement

Collapse
No announcement yet.

ஸ்ரீமத்பாகவதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஸ்ரீமத்பாகவதம்

    Srimad bhagavatam skanda 3 adhyaya 2/3 in tamil
    Courtesy:Smt.Dr.Saroja Ramanujam
    ஸ்ரீமத்பாகவதம் -ஸ்கந்தம் 3-அத்தியாயம் 2/3
    அத்தியாயம் 2/3
    விதுரர் கூறியதைக்கேட்ட உத்தவர் பகவான் மறைந்ததை எண்ணி துக்கம் மேலிட்டு பதில் கூற இயலாதவர் ஆனார். ஐந்து வயதில் இருந்து கிருஷ்ணரை பூஜித்தவர் ஆயிற்றே.


    அவர் க்ருஷ்ணபூஜையாகிற விளையாட்டில் ஈடுபட்டு இருந்தபோது அவர் அன்னை உணவு உண்ண அழைத்ததையும் கவனிக்காமல் பூஜையில் ஆழ்ந்திருந்தாராம். பிறகு கிருஷ்ணர் மதுரை வந்த பின்னர் அவருடைய நெருங்கிய நண்பராகி அவரை விட்டுப்பிரியாமல் இருந்தவர். அதனால் கிருஷ்ணரின் பிரிவு அவரால் தாங்க முடியாததாக இருந்தது.


    கிருஷ்ணரின் நினைவில் சதா ஆழ்ந்திருந்த அவரால் பேசவும் முடியவில்லை. ஏனென்றால் கிருஷ்ணரின் நாமத்தைக் கேட்ட மாத்திரத்திலேயே தன்னை மறந்தவர் ஆனார்.விதுர அவரை எப்படிக் கண்டார் என்பதை பாகவதம் கூறுகிறது.


    தீவ்ரேண பக்தியோகேன நிம்க்ன: ஸாது நிர்வ்ருத:
    புலகோத்பின்னஸர்வாங்கோ முஞ்சன் மீலத்ருசா சுச:


    கிருஷ்ணானுபவத்தில் திளைத்து புளகாங்கிதராக கண்ணீர் பெருகி நின்றார்.


    பின்னர் உலக நினைவுக்கு திரும்பி கூறலானார்
    .
    " என் உற்றார் உறவினர் காலசர்ப்பத்தால் விழுங்கப்பட்டவராகி ஒளி இழந்தனர். கிருஷ்ணனாகிய யாதவ சூரியனின் மறைவுக்குப் பிறகு இருள் சூழ்ந்தது.
    மீன்கள் தண்ணீரில் தெரியும் சந்திர பிம்பத்தைப் பார்த்து அதுவும் ஒரு நீர் வாழும் பிராணி என்று எண்ணியதைப் போல யாதவர்கள் கண்ணனின் பெருமையை அவன் மறைவுக்கு முன் அறிந்திலர்.


    தவத்தினால் மட்டுமே காணகூடிய பகவான் நம்முடன் தோன்றி இந்த உலகத்தை மகிழ்வித்து இப்போது மறைந்ததைப் பற்றி நான் எவ்வாறு விவரிப்பேன்? "


    பின்னர் உத்தவர் கிருஷ்ணனின் பால லீலைகளைப் பற்றிக்கூறி , ராஜசூயயாகத்தில் அவரை நிந்தித்த சிசுபாலன் கூட சாயுஜ்யத்தை அடைந்தான் என்று கூறி மஹாபாரத யுத்தத்தில் அர்ஜூனனின் பாணத்தால் உயிர் இழந்த அரசர் அனைவரும் எவ்வாறு கண்ணனின் மலர்ந்த முகத்தைப் பார்த்துக்கொண்டே நல்ல கதி அடைந்தார்கள் என்றும் அவர் எதிரிகள் கூட அவர் நினைவாகவே இருந்ததால் பக்தர்கள் ஆகிவிட்டனர் என்றும் கூறினார்.


    கிருஷ்ணரின் ஆதரவால் யாதவர்கள் பலம் பொருந்தியவர்கள் ஆகி இந்த பூமி முழுவதையும் வென்றனர். அவரகளை வெல்ல யாராலும் முடியாது. அவர்களே அவர்களை அழித்துக்கொண்டால்தான் உண்டு என்று கூறிய கிருஷ்ணர் அதற்கு திருவுள்ளம் கொண்டார்.


    யுதிஷ்டிரரை சிம்மாசனத்தில் அமர்த்தி, உத்தரையின் கர்பத்தைக் காத்த பின்னர் பற்றற்றவராக த்வாரகையில் வசித்தபோது ஒருநாள் யாதவ இளைஞர்கள் ரிஷிகளை அவமதிக்க அவர்கள் இட்ட சாபமே யாதவகுலம் அழியக் காரணமாயிற்று என்று கூறிய உத்தவர் அதுவும் பகவானின் சங்கல்பமே என்று உரைத்தார்.


    இதைப்பற்றி 12 வது ஸ்கந்தத்தில் விரிவாகக் காணலாம்.
Working...
X