Announcement

Collapse
No announcement yet.

ஸ்ரீமத்பாகவதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஸ்ரீமத்பாகவதம்

    Srimad bhagavatam skanda 2 adhyaya 8 in tamil
    Courtesy:Smt.Dr.Saroja Ramanujam
    ஸ்ரீமத்பாகவதம்- ஸ்கந்தம் 2 அத்தியாயம் 8
    அத்தியாயம் 8
    பரீக்ஷித் கூறினார்.
    "உலகப்பற்றை ஒழித்து பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடத்தில் மனதை செலுத்தி எவ்வாறு உடலை விடுவேனோ அவ்வாறு உபதேசித்தருள வேண்டும்.


    இடைவிடாது ஸ்ரத்தையுடன் யார் பகவானுடைய லீலைகளை சரவணம் கீர்த்தனம் இவை மூலம் வழிபடுகிறார்களோ அவர்கள் இதயத்தில் அவர் விரைவில் பிரவேசிக்கின்றார். இதயத்தாமரையில் பிரவேசித்து உள்ளத்து மாசுகளை எல்லாம் சரத் ருது தாமரைத்தடாகத்தில் உள்ள நீரின் அழுக்கையெல்லாம் சுத்தப்படுத்துவதைப்போல நீக்கி விடுகிறார்."


    இதன் பொருள் என்னவென்றால் இதயம் அல்லது மனம் இருப்பது இறைவன் அருளாகிய தாமரைத்தடாகம். அதில் உள்ள நீரே நம் எண்ணங்கள். அதில் அனாதிகர்ம வாசனையினால் பல ஜன்மத்து அழுக்குப்படிந்து சேறாகி இருக்கிறது. இறைஉணர்வு உள்ளே புகுந்து விட்டால் எண்ணங்கள் தூய்மை பெறுகின்றன.


    பரீக்ஷித் மேலும் கூறியதாவது,
    தௌதாத்மா புருஷ: கிருஷ்ணபாத மூலம் ந முஞ்சதி.
    முக்த ஸர்வ பரிக்லேச: பாந்த: ஸ்வசரணம் யதா
    அவ்வாறு தூய்மையான உள்ளம் கொண்ட மனிதன் கிருஷ்ணரின் பாதத்தை அடைந்து கடினமான பயணத்திற்குப்பின் தன் இருப்பிடத்தை அடைந்த பயணியைப்போல் ஓய்வடைகிறான். '


    அதற்குப்பிறகு பரீக்ஷித் இருபது கேள்விகள் கேட்கிறார். அதற்கு பதிலாக அமைந்ததே பாகவத புராணம்.அவைகளாவன,


    1. ஆத்மாவுக்கு சரீரசம்பந்தம் எவ்வாறு ஏற்பட்டது? இதற்குக் காரணம் உண்டா இல்லை யதேச்சையாக ஏற்பட்டதா?


    2. விஸ்வரூபத்தில் பகவானுக்கு எந்தெந்த அவயவங்கள் வர்ணிக்கப்பட்டனவோ அவை எல்லாமே மனிதருக்கும் உள்ளன . இதற்கு என்ன பொருள்?


    3.பிரம்மா பகவானின் நாபிக்கமலத்தில் இருந்து தோன்றி ஜீவராசிகளை சிருஷ்டித்தார் என்றால் அவை பகவானுக்கு வேறுபட்டவையா?


    4. மாயையின் சக்தியைக்கொண்டு சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் இவைகளை செய்து அனைத்தினுள்ளும் அந்தர்யாமியாக உள்ள பகவான் எவ்வாறு அந்த மாயையைக் கடந்து உள்ளார்?


    5. உலகங்கள் , தேவர்கள் எல்லாம் அவருடைய அவயவங்களில் இருந்து தோன்றினர் என்றும் , உலகங்களும் தேவர்களுமே அவருடைய அவயவங்கள் என்றும் மாறுபட்ட கருத்து நிலவிகின்றது. இதில் எது சரியானது?


    6.கல்பம், விகல்பம், இவைகளின் கால அளவுகள் என்ன.? காலம் என்பது இறந்த காலம் , நிகழ் காலம், வரும் காலம் என்று எவ்வாறு வகுக்கப்படுகிறது? பிரம்மா தேவர்கள் இவர்களுடைய ஆயுள் எவ்வளவு காலங்கள் அடங்கியது/


    7. வினாடி , வருஷம் முதலிய சிறிய , பெரிய காலத்தின் பேதங்கள் எப்படிப்பட்டவை?


    8. எந்த விதமான கர்மங்களின் மூலம் எந்த பிறவியையும் உலகங்களையும் ஜீவன் அடைகிறான்?


    9. பூமி , பாதாளம், திக்குகள் ஆகாசம், க்ரஹங்கள் , நக்ஷத்ரங்கள், நதிகள், மலைகள் சமுத்ரங்கள் இவைகளைப பற்றியும் அங்கு வசிக்கும் பிராணிகளின் உறபததியையும் பற்றி சொல்ல வேண்டும்.


    1௦.அண்டகோசத்தின் உள்ளேயும் வெளியேயும் உள்ள அளவுகளை பற்றியும், மகாபுருஷர்களின் சரிதங்கள், வர்ணாஸ்ரம தர்மங்கள் இவைகளைப் பற்றியும் கூறவேண்டும்.,


    11. பகவானின் அவதார லீலைகள், யுகங்கள் யுகதர்மங்கள் இவை பற்றி விளக்க வேண்டும்.


    12.ஸாதாரண தர்மங்கள், விசேஷ தர்மங்கள்,ராஜதர்மங்கள் , ஆபத்தர்மங்கள் இவைகளைப் பற்றி கேட்க விரும்புகிறேன்.


    13. ப்ரகருதி, மஹத் முதலிய தத்துவங்கள், அதன் பரிணாம வளர்ச்சி இவை பற்றியும்


    14.பகவானை ஆராதிக்கும் முறை, அஷ்டாங்கயோகம் இவைகளைப் பற்றியும்,


    15. யோகம் மூலம் அணிமாதி சித்தி அடைந்து லிங்க சரீரத்தின் மூலம் லயம் அடைவது,இவைகளையும்,


    16. வேதம், ஸ்ம்ருதி, தர்ம சாஸ்திரம், இதிகாசம் ,புராணம் இவைகளின் ஸ்வ்ரூபத்தையும் விளக்க வேண்டும்.


    17. பிராணிகளின் சிருஷ்டி, ஸ்திதி சம்ஹாரம் எவ்வாறு நிகழ்கிறது?


    18. வேதத்தில் கூறிய இஷ்டபூர்த்திக்குரிய கர்மங்கள், முதல் மூன்று புருஷார்த்தங்கள் இவைகளைப் பற்றிக் கூறியருள வேண்டும்.


    19. ஜீவர்களின் உற்பத்தி, பாஷண்ட மதங்களின் தோற்றம், ஆத்மாவின் பந்தமோக்ஷம், ஆத்மாவில் லயிப்பு இவை பற்றியும்,


    20.. ஸ்வதந்த்ரராகிய பகவான் தன் மாயையினால் விளையாடுவதையும் பின்னர் அதை விட்டு விலகி சாக்ஷிபூதராக இருப்பதும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்,..


    அந்த சாதுக்களின் கூட்டத்தில் இவ்விதம் பரீக்ஷித்தால் பிரார்த்திக்கப்பட்ட சுகபிரம்ம ரிஷியானவர், மிக ப்ரீதியடைந்தவராய், பகவானால் பிரம்ம கல்பத்தின் ஆரம்பத்தில் பிரம்மாவுக்கு கூறப்பட்ட வேதத்திற்கு ஒப்பான எல்லா கேள்விகளுக்கும் விடையாய் அமைந்த பாகவத புராணத்தை சொல்லலானார்.
Working...
X