Announcement

Collapse
No announcement yet.

ஹயக்ரீவஸ்தோத்ரம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஹயக்ரீவஸ்தோத்ரம்

    ஹயக்ரீவஸதோத்ரம் - 5, 6


    .5.விசுத்த விஞ்ஞானகனஸ்வரூபம்
    விஞ்ஞான விச்ராணனபத்த தீக்ஷம்
    தயாநிதிம் தேஹப்ருதாம் சரண்யம்
    தேவம் ஹயக்ரீவம் அஹம் ப்ரபத்யே


    தூய்மையான(விசுத்த) ஞானத்தின் மொத்தவடிவமான (விஞ்ஞான கனஸ்வரூபம்), ஞானத்தை அருள்வதில் வ்ரதம் பூண்டவரும் (விஞ்ஞான விச்ராணன பத்த தீக்ஷம்) , கருணைக்கு உறைவிடமும், எல்லா உயிர்களுக்கும் அடைக்கலமாகவும் உள்ள ஹயக்ரீவரை வணங்குகிறேன்


    அடுத்துவரும் ஸ்லோகங்கள் ஹயக்ரீவர் தரிசனம் தந்தபோது அவரைப்பார்த்து இயற்றியவை என்று சொல்லப்படுகிறது. அவை ஹயக்ரீவருடன் நேரில் பேசுவது போன்று இருப்பவை.


    6. அபௌருஷேயைரபி வாக்ப்ரபஞ்சை:
    அத்யாபி தே பூதிம் அத்ருஷ்டபாராம்
    ஸ்துவன்னஹம் முக்த இதி த்வயைவ
    காருண்யதோ நாத கடாக்ஷணீய:


    பிரபோ! ஒருவராலும் இயற்றபடாதவை ( அபௌருஷேயம்) எனப்படும் வேதத்தின் பிரிவுகளாலும்(வாக்ப்ரபஞ்சை இன்றளவும் (அத்யாபி) எல்லை காண முடியாத (அத்ருஷ்டபாராம் ) உன் மஹிமையை ( தே பூதிம்) துதிக்கின்ற நான் (ஸ்துவன் அஹம்) அறியாச்சிறுவன் (முக்த இதி) என்று உன்னால் (த்வயா) கருணையுடன் (காருண்யத கடாக்ஷிக்கத் தகுந்தவன் (கடாக்ஷணீய


    வேதங்கள் பகவானின் மூச்சிலிருந்து தோன்றியபடியால அவை அபௌருஷேயம் , ஒருவராலும் இயற்றப்படாதவை எனப்படுகின்றன. அந்த வேதங்களாலும் அவன் பெருமையைக் கூற இயலவில்லை.


    தேசிகர் யாதவாப்யுதயத்தில் கூறுகிறார், 'யதேகைகககுணப்ராந்தே ஸ்ராந்தா: நிகமவந்தின: யதாவத் வர்ணனே அஸ்ய ,' வேதமாகிற துதிப்பாடகர்கள் பகவானின் ஒரு குணத்தை வர்ணிப்பதற்குள் களைத்துவிடுகின்றார்களாம் . அதனால் அவரை உள்ளபடி வர்ணிக்க வேதங்களாலும் இயலவில்லை என்கிறார் .


    மேலும் அவருடைய தன்னடக்கத்தையும் காண்கிறோம், முக்த: என்ற சொல்லின் மூலம்.நான் ஒரு அறியாப்பிள்ளை என்கிறார்.


    ஒரு குழந்தையின் புரியாத மழலைச்சொல்லால் எவ்வாறு ஒரு தந்தை பூரிப்படைவானோ அதுபோல பகவான் நாம் துதிக்கும் சொற்களால் மகிழ்வடைகிறான்.,அதனால் நாம் சரியாக உச்சரிக்கிறோமா என்று கூட கவலைப்பட வேண்டுவதில்லை.
Working...
X