ஹயக்ரீவஸ்தோத்ரம் ஸ்லோகம் 3/4
3.ஸமாஹாரஸ்ஸாம்னாம் பிரதிபதம் ருசாம் தாம யஜூஷாம்
லய: பிரத்யூஹானாம் லஹரிவிததி: போதஜலதே:
கதாதர்பக்ஷுப்யத் கதககுல கோலாஹலபவம்
ஹரது அந்தர்த்வாந்தம் ஹயவதனஹேஷாஹலரவ:
ஹயக்ரீவரின் கனைப்பு சப்தம் , ஹேஷாஹலரவ:, சாமவேதத்தின் சேகரிப்பு.(ஸமாஹார
ரிக்வேதத்தின் மறுபதம்.(பிரதிபதம்) யஜுர்வேதத்தின் இருப்பிடம்/ ஒளி. (தாம என்னும் சொல் இருப்பிடம் , ஒளி இரண்டையும் குறிக்கும். )
சாமகானம் வாகீசராகிய ஹயக்ரீவரிடம் இருந்து வருகிறது. ரிக் வேதம் மந்த்ரங்களைக் கொண்டது. அதன் மறு பொருளாக ஹயக்ரீவர் இருக்கிறார். யஜூர்வேதம் வேத கர்மாக்களை குறிப்பதால் அவைகளின் பயன் அவரை அடைவதே என்பதால் அவைகளின் இருப்பிடமும் ,ஒளியைதருபவரும் அவரே.
கற்பதில் உள்ள எல்லா இடையூறுகளையும் (ப்ரத்யூஹானாம்) அழிக்கும் (லய
வல்லமை வாய்ந்தது. அறிவு எனும் கடலின்( போத ஜலதே
அலைகளின் வரிசை.( லஹரிவிததி
ஊஹ என்றால் அறிவது பிரத்யூஹ என்றால் அதற்கு இடையூறு. ஹய்க்ரீவருடைய கனைப்பு சப்தப்ரம்மமே ஆதலால் கற்பதில் உள்ள இடையூறுகள் அகல்கின்றன.அது மட்டும் அல்ல. மேலும் அறிவு அலைகளை உற்பத்தி செய்யும் சமுத்திரமாகவும் இருக்கிறார்.
அவருடைய கனைப்பொலி வாதம் புரிவதால்செருக்குற்ற ( கதாதர்ப) வாதிகளின் ஆரவாரத்தால் ஏற்பட்ட (கதககுல கோலாஹலபவம் ) கலக்கத்தினால் உண்டான மன இருளை (க்ஷுப்யத் அந்தர்த்வாந்தம்) ஹரது- போக்கடிக்கட்டும்.
ஹயக்ரீவரின் அருளைப் பெற்றவர்கள் எதிர்வாதம் செய்து மக்கள மனதை மயக்குவோருக்கு சவாலாக இருக்கிறார்கள். இதற்கு கவிதார்கிக கேசரி என்று பட்டம் பெற்ற தேசிகரே ஸாக்ஷி.
அப்படிப்பட்டவர்களின் வாதத்தினால் ஏற்பட்ட ஆரவாரத்தை ஹயக்ரீவரின் கனைப்பு சப்தம் விழுங்கி விடுகிறது.
4.ப்ராசீ ஸந்த்யா காசித் அந்தர்நிசாயா:
பிரக்ஞா த்ருஷ்டே: அஞ்சனஸ்ரீ: அபூர்வா
வக்த்ரீ வேதான் பாது மே வாஜிவக்த்ரா
வாகீசாக்யா வாசுதேவஸ்ய மூர்த்தி:
, குதிரை முகம் கொண்டதும், ( வாஜிவக்த்ரா- வாஜி என்றால் குதிரை ) மனஇருள் என்ற இரவின் (அந்தர்நிசாயா
விடியற்காலமாகவும் , (ப்ராசீ சந்த்யா) ஞானக்கண்ணின் (பிரக்ஞா த்ருஷ்டே: ), அதிசயமான (அபூர்வா) கண் மையாகவும் (அஞ்சன ஸ்ரீ: ) வேதங்களை உபதேசிக்கின்ற : (வக்த்ரீ வேதான்) வாசுதேவரின் கல்விக்கடவுள் (வாகீசர் )என்ற ரூபம், (மூர்த்தி
பாது (bAATHU) மே, என் முன்னர் பிரகாசிக்கட்டும்.
மனஇருள் அஞ்ஞாநத்தினால் வருவது. மனதில் ஹயக்ரீவரின் உருவம் த்ன்றினால் அந்த இருள் உதயசூரியன் வந்தாற்போல் மறைகிறது. மந்திர மை போட்ட கண்களுக்கு எல்லாம் தெரிவதைப்போல் ஹயகிரீவரின் உருவம் ஞானக்கண்ணின் மையாக விளங்குகிறது.
வக்த்ரீ வேதான் என்பது பகவான் வாசுதேவர் ஹயவதனராகத் தோன்றி பிரம்மாவுக்கு வேதத்தை உபதேசம் செய்ததை குறிக்கிறது.