Announcement

Collapse
No announcement yet.

Tiruvothoor

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Tiruvothoor

    Tiruvothoor
    Courtesy:Sri.Dheepan


    சம்பந்தர் திருக்கடைக்காப்பு


    திருவோத்தூர் பதிகம்


    குறிப்பு: திருவோத்தூர் திருவண்ணமலைக்கு அருகில் உள்ள தலம். தீது தீர்ந்திடும் தீர்த்தமாய் செய்யாறு பொலி திருவோத்தூர் என்பது ஆன்றோர் வாக்கு


    சைவ அடியார் ஒருவர் இறைவனுக்காக வளர்த்த பனைமரங்கள் யாவும் ஆண்பனைகளாக விளைந்ததை கண்டு அவரை எள்ளி நகையாடிய சமண சமயத்தினரின் செய்கயை சம்பந்தப் பெருமானிடம் அவர் விண்ணப்பிக்க,


    சுவாமிகள், பூத்தேர்ந்தாயென என்று எடுத்து பதிகம் பாட ஆண்பனைகள் யாவும் குலை ஈந்தன பதிகத்தின் திருக்கடைக்காப்பல் குரும்பை ஆண் பனை ஈங்குலை ஓத்தூர் என்ற குறிப்பு அமைந்துள்ள இப்திகம் சம்பந்தரின் அற்புதப் பதிகங்களில் ஒன்று


    பாடல்


    பூத்தேர்ந்து ஆயன கொண்டு நின் பொன்னடி
    ஏத்தாதார் இல்லை எண்ணுங்கால்
    ஓத்தூர் மேய ஒளி மழுவாளன் கைக் கூத்தீரும்ம குணங்களே.




    குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர்
    அரும்பு கொன்றை அடிகளைப்
    பெரும் புகலியுண் ஞானசம்பந்தன் சொல்
    விரும்புவார் வினைவீடே


    பொருள்


    திருஓத்தூரில் அழகிய கையில் ஒளி பொருந்திய மழுவாகிய வாளை ஏந்தியவராய் எழுந்தருளிய கூத்தரே, ஆராய்ந்து பார்த்தால் பூசைக்குரிய நறுமலர்களைத் தேர்ந்து பறித்தும் ஏனைய உபகரணங்களைச் சேகரித்துக் கொண்டு, உம் குணநலங்களைப் போற்றி பொன் போன்ற திருவடிகளை ஏத்தி, வணங்காதார் இல்லை.




    திருவோத்தூரில், ஆண் பனைகள் குரும்பைக் குலைகளை ஈனும் அற்புதத்தைச் செய்தருளிய கொன்றை அரும்பும் சடைமுடி உடைய இறைவரைப் பெருமை மிக்க திருப்புகலி என்னும் பெயருடைய சீர்காழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் போற்றி உரைத்த இப்பாமாலையை விரும்பும் அன்பர்களின் வினைகள் அழியும்.


    குரும்பை ஆண் பனை ஈங்குலை ஓத்தூர் என்று சம்பந்த பெருமான் குறிக்கிறார்


    பத்து பாடல்கள் அமைந்த தொகுப்பு பதிகம். சம்பந்தப் பெருமான் ஒவ்வொரு பதிகத்தின் இறுதியிலும்


    பதிக மேன்மையையும் அவ்வூர் பெருமையையும் தம்மையும் தாம் பிறந்த சீர்காழியையும் குறிப்பது வழக்கம்


    அவ்வகையில் அடியவர் பொருட்டு ஆண்பனைகளை குலையீன செய்ய சுவாமிகள் பத்து பாடல்கள் பாடியதும்




    ஆண்பனை மரங்கள் யாவும் இறைவனின் அருளால் குலை ஈந்த அற்புதம் நடந்து விட்டதை


    சுவாமிகள் ஆண்பனைகள் குலையீந்த அற்புதமான திருவோத்தூர் என்ற குறித்து
Working...
X