Announcement

Collapse
No announcement yet.

காயத்ரி ************* மந்திரத்தின் ****************** மகிமை!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • காயத்ரி ************* மந்திரத்தின் ****************** மகிமை!

    பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார்.
    “மந்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன்”.
    அந்த அளவு சிறப்பு வாய்ந்தது காயத்ரி மந்திரம்.
    இது மகரிஷி விஸ்வாமித்திரர் உபதேசித்த மந்திரம் என்று சொல்லப்படுகிறது.
    அக இருளை நீக்கி ஞான ஒளியைத் தந்தருளும்படி இறைவனை வேண்டும் மந்திரம் இது.
    காயத்திரி மந்திரம் 24 அட்சர சக்திகள் கொண்டது.
    அவைகள் ஒலி வடிவானவை.
    மந்திரங்களுக்கே தலையாய காயத்ரி மந்திரம் இது தான்;“ஓம்

    பூர் புவ ஸ்வஹ
    தத் ஸ்விதுர்
    வரேணியம்
    பர்கோ தேவஸ்ய தீமஹி
    தியோ யோநஹ
    ப்ரசோதயாத்”

    இந்த மந்திரத்தைச் சொல்லும் போது இங்கு கொடுத்துள்ள படியே ஓம் முதற்கொண்டு ஒவ்வொரு அடி இறுதியிலும் நிறுத்திச் சொல்ல வேண்டும்.
    ”பூஉலகம்,
    மத்திய உலகம்,
    மேல் உலகம் மூன்றுக்கும் சக்தியான அந்தப் பரம ஜோதி சொரூபமான சத்தியத்தை நான் தியானிக்கிறேன்.

    அந்தப் பரம சக்தி ஒளி என் அறிவைத் தூண்டி என்னை உண்மையை அறிந்த நிலைக்கு உயர்த்தட்டும்”
    என்பது தான் காயத்ரி மந்திரத்தின் பொருள்.காயத்ரி மந்திரச் சிறப்புப் பற்றி புனித நூல்களும், மகான்களும், பேரறிஞர்கள் இப்படிப் புகழ்ந்து கூறுகிறார்கள்.
    ”இவ்வுலகத்திலும்,
    பரவுலகத்திலும் எல்லா விருப்பங்களையும் பூர்த்தி செய்யும் தவத்தை வளர்க்க காயத்திரியை விட மேலான மந்திரம் இல்லை”

    என்கிறது
    தேவிபாகவதம்.

    ”மூன்று வருடங்கள் காயத்ரி மந்திரத்தை ஜெபித்து வருபவன்
    வாயுபோல சுதந்திரமாக இயங்கி பிரம்மத்தை அடைவான்”
    எனக் கூறுகின்றது மனுஸ்மிருதி.
    ”நான்கு வேதங்களையும் தராசின் ஒரு தட்டில் வைத்து
    அதற்கு சமமாக காயத்ரியை மட்டும் மறுதட்டில் வைத்தால்
    எடை சரியாகவிருக்கும்.
    காயத்ரி வேதங்களின் தாய்.

    சகலபாவங்களையும் போக்குபவள்.
    காயத்ரியைப் போல பவித்திரமான மந்திரம்
    மண்ணுலகிலும் இல்லை,
    விண்ணுலகிலும் இல்லை.
    காயத்ரிக்கு மேலான ஜபம் இருந்ததுமில்லை,
    இனிமேல் இருக்கப் போவதுமில்லை”
    என்கிறார் யக்ஞவல்கியர்.

    காயத்ரி மந்திரமானது உலகத்துக்கே பொதுவான ஒன்றாகும்.
    அது எந்த ஒரு மதத்தையோ அல்லது கடவுளையோ குறிப்பிட்டு சொல்லவில்லை.
    இம்மந்திரம் அனைவருக்கும் பொதுவான பரம்பொருளை தியானிக்கச் சொல்லும் அருமையான மந்திரமாகும்.
    எனவே இம்மந்திரத்தை அனைவரும் ஜபிக்கலாம்.
    சந்தியா காலங்களில், அதாவது காலை மாலை நேரங்களில், காயத்ரி மந்திரம் சொல்வது மிகவும் நல்லது.
    இந்த காயத்ரி மந்திர ஜபத்தை சிரத்தையுடனும், அர்த்தம் நினைவில் வைத்தும் தொடர்ந்து சொல்லி வந்தால்
    மனதில் நிதானமும், அமைதியும் ஏற்பட ஆரம்பிக்கும்.
    நமது வாழ்க்கையில் சிக்கலான சந்தர்ப்பங்களில் தெளிவாக முடிவெடுக்க முடியும்.
    மாணவர்கள் பாடங்களை பயிலும் முன் இந்த மந்திரத்தை ஜபித்துவிட்டு தொடங்கினால் நிச்சயம் ஆழ்மனதில் நன்றாக பதியும்.
    இந்த மகா மந்திரத்தைப் பயன்படுத்தி முன்னேறுவோமாக!
    நன்றி : கணேசன் எழுத்தாளர்
Working...
X