Announcement

Collapse
No announcement yet.

கடன் தீர்க்கும் அங்காரக ஸ்தோத்திரம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கடன் தீர்க்கும் அங்காரக ஸ்தோத்திரம்

    கடன் தீர்க்கும் அங்காரக ஸ்தோத்திரம்
    செவ்வாய்க்கிழமைகளில் சிவப்பு சந்தனம், புஷ்பம், தூப-தீபத்துடன் சர்க்கரைப் பொங்கல் சமர்ப்பித்து, ஸ்ரீசெவ்வாய் பகவானின் திருநாமப் போற்றிகளைக் கூறி, அவரை மனதார வழிபடவேண்டும்.
    அத்துடன், செவ்வாய் பகவானின் திருமுன் (யந்திரம் அல்லது திருவுருவப் படத்துக்கு முன்பாக) அடுப்புக் கரியைக் கொண்டு கிழக்கு- மேற்காக மூன்று கோடுகள் கிழித்து, கீழ்க்காணும் ஸ்தோத்திரப் பாடலைப் படித்தவாறு அந்தக் கோடுகளை இடது காலால் அழித்து, அங்காரகனைப் பிரார்த்திக்க, கடன் தொல்லைகள் விரைவில் நீங்கும்.
    அங்காரக மஹீபுத்ர பகவன் பக்த வத்ஸல
    நமோஸ்துதே மமாசேஷம் குணமாசு விமோசய
    ருணரோகாதிதாரித்ர்ய பாபக்ஷ§தபம்ருத்யவ:
    பயக்ரோத மன:க்லேசா: நச்யந்து மமஸர்வதா
    ருணதுக்க வினாசாய புத்ரஸந்தான ஹேதவே
    மார்ஜயாம்யஸிதாரேகா: திஸ்ரோ ஜன்மஸமுத்பவா:
    துக்கதௌர்பாக்யநாசாய ஸுக ஸந்தான ஹேதவே
    க்ருதரேகாத்ரயம் வாம பாதாத் ஸம்மார்ஜயாம்யஹம்

    கருத்து: பூமியின் மைந்தனும் பகவானும் பக்தர்களின் மீது பிரியம் கொண்டவருமான ஸ்ரீஅங்காரக பகவானே, தங்களை நமஸ்கரிக்கிறேன். வெகு சீக்கிரம் எனது எல்லாக் கடன்களையும் போக்கியருள வேண்டும்.

    என்னை வாட்டும் கடன், ரோகம் முதலானவை, தரித்திரியம், பாபம், பசி, அபிமிருத்யு, பயம், கோபம், மனக்கவலை ஆகிய யாவும் அழியட்டும்.
    கடனால் ஏற்பட்ட துக்கம் விலகுவதற்கும், தொடர்ந்து குழந்தைகள் பிறப்பதற்கும் வேண்டி, முன் ஜன்ம கர்ம வினைப்பாடுகளை அழிப்பதுபோன்று இந்த மூன்று கோடுகளையும் அழிக்கிறேன் (என்றபடி மூன்று கோடுகளையும் அழிக்கவேண்டும்.).
    அத்துடன், 'மிகுந்த தேஜஸ்வியும், ஸ்ரீபரமசிவனின் வியர்வையில் இருந்து உண்டானவருமான செவ்வாய் பகவானே, தங்களை வணங்குகிறேன். மிகுந்த கடனாளியான நான் உங்களையே சரணடைகிறேன். எனது கஷ்டங்களை நீக்கி அருளுங்கள்’ என மனதார வேண்டிக்கொள்ள வேண்டும்.
    இப்படி செவ்வாய்க்கிழமைகளில் ஸ்ரீஅங்காரக பகவானை வழிபடுவதால் நமது கடன்கள் யாவும் நீங்கும். நமது இல்லத்தில் தரித்திரமும், வறுமையும் அகன்று குபேர சம்பத்து உண்டாகும்
    - விநாயகம், சென்னை-99
Working...
X