கே.குமார சிவாச்சாரியார்கல்வியில் அதிக நாட்டம், பேச்சுத்திறன், சொல்வன்மை ஆகிய திறன்களையும், கலைத்துறையில் ஈடுபாடு போன்ற வித்தியாசமான சக்தியையும் உங்கள் குழந்தைகள் பெற வேண்டுமானால், ஸ்ரீராஜமாதங்கி தேவியை மனமுருகி வழிபடவேண்டும். எல்.கே.ஜி குழந்தைகள் முதல் பிஹெச்.டி மாணவர்கள் வரை கல்வியில் சிறப்புற, இந்த அம்பிகையைக் குறித்த வழிபாடு மிகுந்த பலன் தரும்.
அம்பிகையின் வழிபாட்டைத் தெரிந்துகொள்ளுமுன் அறிவில் சிறக்கவைக்கும் ஜாதக நிலைகள் குறித்து அறிவோம். இதுகுறித்து, பிருஹத் ஸம்ஹிதையின் சில முக்கிய குறிப்புகள் விளக்குகின்றன.
* ஒரு குழந்தையின் பேச்சுத்திறனை மூன்றாம் இடம் குறிப்பிடுகிறது. உயர் படிப்பில் ஆர்வம், கலைத்திறனை ஐந்தாம் இடம் சொல்லும், வளரும் குழந்தையின் தனித்திறமையையும் அதிக ஆற்றலையும் பத்தாம் இடம் வெளிப்படுத்தும்.
* ஒன்பதாம் இடத்தில் புதன் அமர்ந்தால் ஜாதகருக்குக் கல்வி மேன்மையும் பக்தியும் அறிவாற்றலும் பளிச்சிடும்.
* பாக்கிய ஸ்தானத்தில் குரு அமர்ந்தால் தெய்வ பக்தியுடன் சிறந்த கல்வி அறிவு, பேசும் திறமை வெளிப்படும். ஆனால், அதிக பேச்சால் சில தடைகளையும் சந்திக்க நேரிடலாம்.
* சுக்கிரன் இரண்டாம் இடத்தில் இருந்தால் ஜாதகருக்கு இனிமையான பேச்சுத்திறமை, பொது இடங்களில் பேசி நல்ல பெயர் வாங்குதல் போன்ற சந்தர்ப்பங்கள் கிடைக்கும்.
* சுக்கிரன் 10-ல் அமர்ந்திருக்க கல்வி அறிவில் பாதி நாட்டமும், படித்துக் கொண்டிருக்கும்போதே போட்டி, கவிதை எழுதுதல் - என்ற வெளிவிழாக்களில் புத்தி சென்றிட பரிசு, பாராட்டுதல்கள் கிடைக்கத் தொடங்கும்.
* ஐந்தாமிடத்தில் சனி அமர்கிற காலத்தில் புத்தி மந்தத்தை ஏற்படுத்துவார். அதே சனிபகவான் 10-ல் அமர்ந்து விட்டால் ஜாதகருக்கு சாஸ்திர ஞானம் வந்துவிடும். சிறந்த கல்விமானாக, உபதேசம் செய்பவராக, மன தைரியத்துடன் கல்வித்துறை, கலைத்துறைகளில் சாதித்துக் கொண்டிருப்பார்.
* வாக்கு ஸ்தானமாகிய 2ல் ராகு அமர்ந்தால் கல்வியில் தேர்ச்சி பெற்று அரசுப் பணி ஏற்று உயர்ந்த அஸ்தஸ்தோடு மேலும் உயர் படிப்பையும் தொடர்வார்.
* லாபஸ்தானமாகிய 11-ல் கேது அமர்ந்திருக்கும்போது ஜாதகர் பெரும் யோகப் பலன்களைப் பெற்று கல்வியில் மேன்மை பெற்று சமுதாயத்தில் நல்ல அந்தஸ்தைப் பெற்று வாழ்வார்.
* ஒருவர் ஜாதகத்தில் கேது 5ல் அமர்ந்து புதன் 9ல் இருந்தால் அவருக்கு புத்திக் கூர்மை, சாதிக்கும் ஆற்றல் பளிச்சிடும்.
ராஜமாதங்கி வழிபாடு...
இங்கு கொடுக்கப்பட்டுள்ள மாதங்கி யந்திர வரைவை ஒரு மணைப் பலகையில் கோலமாகப் போட்டு, அதில் தீபம் ஏற்றி வைத்து முதலில் வித்யா கணபதியை வணங்க வேண்டும். அடுத்து தியானம் கூறுகையில் நீலநிற மலர் எடுத்துக் கொண்டு.
சியாமாங்கீம் சசிசேகராம் திரிநயனாம்
ரத்ன சிம் ஹாஸன ஸ்திதாம்
வேதைர்ப்பாஹு தண்டை: அஸி
கேடக பாசாங்குச தராம் - என்று தீபத்துக்கு அருகில் சமர்ப்பிக்கவும். பின்னர் மணைப்பலகை ஒன்றில் அமர்ந்து,
'ஓம் ஹ்ரீம் க்லீம் ஹூம் மாதங்க்யை பட் ஸ்வாஹா’ எனும் ராஜமாதங்கியின் மூலமந்திரத்தை 108 தடவை ஜெபிக்க வேண்டும். பிறகு, அவல் பாயசம் வைத்து நிவேதனம் செய்து, அதை சிறு குழந்தைகள் ஐந்து பேருக்குக் கொடுத்து, நாமும் ஞானப் பிரசாதமாக எடுத்துக்கொள்ளலாம். கீழ்க்காணும் பாடலைப் பாடியும் வழிபடுவது விசேஷம்.
ஞானமும் திருவும் கொடுக்கும் ஞாலத்தின் புகழ்தேவி
நானிலம் போற்றும் சொற்பாவை அடியற்றின்
வேறெதும் வேண்டுவதுண்டோ இம்மாநிலத்திலே
கூறும் மொழிகாக்கும் குணசுந்தரீ மாதங்கீ!

Comment