Announcement

Collapse
No announcement yet.

மார்கழி தரிசனம்..

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மார்கழி தரிசனம்..

    திண்டுக்கல் கோட்டை மாரியம்மன்கோயில் வந்த கதை
    திண்டுக்கல் பகுதியை திப்பு சுல்தான் ஆட்சி செய்த காலத்தில், வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கவும், போர்க் கருவிகளைப் பதுக்கி வைக்கவும் மலை சார்ந்த இடங்களில் பயிற்சிக் கூடங்கள் அமைக்கப் பட்டன. தேசம் செழிக்கவும் நாட்டைப் பாதுகாக்கவும் கடவுளை வணங்கிவிட்டுப் பயிற்சியில் இறங்கினார்கள் அந்த வீரர்கள். அப்போது, அம்மன் விக்கிரகம் ஒன்றைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்கள். பிறகு, அம்மனின் சாந்நித்தியத்தை உணர்ந்து, அங்கே கோயில் எழுப்பப்பட்டது. எனவே, அந்த அம்மனுக்கு 'கோட்டை மாரியம்மன்’ எனத் திருநாமம் அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல வரலாறு.
    திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த ஆலயம்.
    தனிச் சிறப்பு:
    மதுரை வீரனும் ஸ்ரீமுனீஸ்வரரும் காவல் தெய்வங்களாகவும் பரிவார தெய்வங்களாகவும் இருக்க, உள்ளே கருவறையில் அழகுறக் கோயில் கொண்டிருக்கிறாள் ஸ்ரீகோட்டை மாரியம்மன். குழந்தைகளைக் காக்கும் அன்னை என்று இவளைப் போற்றுகின்றனர் பக்தர்கள். இங்கு வந்து கொடிமரத்துக்கு அருகில் உப்பு அல்லது மஞ்சளைக் கொட்டி அம்மனை வழிபட்டால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எவருக்கு எந்த நோயானாலும் அது விரைவில் தீரும் என்பது நம்பிக்கை.
    குழந்தைகள் ஆரோக்கியத்துடன் இருக்கவும், கண் கோளாறுகளில் இருந்து விடுபடவும் மாவிளக்கேற்றி வழிபடுவதும் இங்கு நடைபெறுகிறது.


    மார்கழியில் விளக்கு பூஜை:
    மார்கழி துவங்கியதும், தினமும் அதிகாலையில், பிரம்ம முகூர்த்த வேளையில், விளக்கு பூஜைக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. விளக்கு, எண்ணெய்யுடன் வருவோருக்குத் திரி முதலான பூஜைப் பொருட்கள் இங்கே வழங்கப்படும். பிறகு, 108 போற்றிகளுடன் அம்மனைத் துதித்துப் பூஜை நடைபெறும். இந்தப் பூஜையில் கலந்துகொண்டு அம்மனை வணங்கினால், தாலி வரம் கிடைக்கும்; தாலி பாக்கியம் நிலைக்கும் என்பது ஐதீகம்!
    தவிர, மார்கழியின் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலை வேளையில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அந்த வேளையில், சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு மாரியம்மனை வணங்கி மனதார வேண்டினால், சகல தோஷங்களும் விலகி, சந்தோஷம் பெருகும் என்கின்றனர் பக்தர்கள்.
    மாசியில் 19 நாள் விழாவாக நடைபெறுகிறது திருவிழா. வீதியுலா, தீர்த்தவாரி, தெப்போத்ஸவம் என அமர்க்களப்படுமாம் ஆலயம்.



  • #2
    Re: மார்கழி தரிசனம்..


    YES, Sri.PSN. I had the darshan of Sri Kottai Maariyamman when I attended the wedding of my friend's son in Dindigul a decade back.It is a famous and beautiful temple where you can feel the divine vibrations.
    A must visit temple.
    Varadarajan

    Comment

    Working...
    X