திரு மாலை :ஊரிலேன் காணி இல்லை -பெரியவாச்சான் பிள்ளை
ஊரிலேன் காணி இல்லை உறவு மற்று ஒருவர் இல்லை
பாரில் நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி
கார் ஒளி வண்ணனே கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர் களைகண் அம்மா அரங்க மா நகர் உளானே –
ஆனை இடர் பட்ட போது அது தனக்கு உதவுகைக்காக நினைத்த நினைவு
உமக்கு இல்லையாகில்
ஸ்ரீ சாளக்ராமம் ஸ்ரீ அயோதியை கோயில் முதலாக
நாம் உகந்த நிலங்களிலே ஒருவனுக்கு ஜன்மாதிகள் உண்டானால்
அவனை நமக்கு ரஷித்தே தீர வேணும்
அங்கனே இருப்பன சில உண்டோ -வென்ன –
அவையும் எனக்கு இல்லை -என்கிறார்-