Courtesy: Sumathi sreeni.
நல்லனவற்றையே பார்க்க, கேட்க, அனைவருக்கும் நல்லதே நடக்க
ஓம் பத்ரம் கர்ணேபி: ச்ருணுயாம தேவா: பத்ரம் பச்யேமாக்ஷபிர்: யஜத்ரா:
ஸ்திரைரங்கைஸ் துஷ்ட்டுவாக்ம்ஸஸ்தனூபி: வ்யசேம தேவஹிதம் யதாயு:
லோகா ஸமஸ்தா ஸுகினோபவந்து: ஸர்வே ஜனா ஸுகினோபவந்து:
- முண்டக உபநிஷத்
பொருள்:
இறைவனே, தேவர்களே! நாங்கள் காதுகளால் நல்ல விஷயங்களையே கேட்க அருள் புரிய வேண்டும்; க ண்களால் நல்லனவற்றையே பார்க்க வேண்டும். எங்கள் சிந்தனையில், செயலில் எல்லாம் நல்லன மட்டுமே நிறைந்தி ருக்க வேண்டும்.
இந்த உலகத்தோர் அனைவருமே இன்புற்றிருக்க வேண்டும். அனைத்து உயிரினங்களும் ஆனந்தமாக வாழ வேண்டும். அருள் புரியுங்கள் இறைவனே, தேவர்களே.
(எல்லோரும் நலமாய் இருக்க விரும்பும்போது, அந்தப் பொதுநல வேண்டுதலில் நம் நலனும் உட்படுவதால், இந்த ஸ்லோகத்தை எப்போது நேரம் கிடைத்தாலும் சொல்லி வரலாம்.)
மழலை வரம் கிட்ட, குடும்பம் மேன்மையுற...
கதம்பஸூனகுண்டலம் ஸுசாருகண்டமண்டலம்
வ்ரஜாங்கனைகவல்லபம் நமாமி க்ருஷ்ண துர்லபம்
யசோதயா ஸமோதயா ஸகோபயா ஸநந்தயா
யுதம் ஸுகைகதாயகம் நமாமி கோபநாயகம்
& ஆதிசங்கரர் அருளிய கிருஷ்ணாஷ்டகம்
பொதுப் பொருள்: கதம்பப் பூக்களை காதில் குண்டலமாக தரித்தவனே... செழுமிய கன்னங்கள் ஒளிர காட்சி தரும் பேரழகனே... கோபியர்களுக்கு என்றென்றும் நாயகனாக விளங்குபவனே... கிடைத்தற்கரிய பெறும் பேறான இனிய கண்ணனே, நமஸ்காரம். நந்தகோபன், யசோதை, கோபியர் என்று அனைவருக்கும் பேரானந்தத்தை அருளிய கண்ணா, உன் பிஞ்சுத் திருவடிகளுக்கு என் நமஸ்காரம்.
(இத்துதியை கண்ணனின் திருவுருமுன் பக்தியுடன் படித்தால் மழலை வரம் வேண்டி ஏங்குவோருக்கு அந்த வரம் கிட்டும்; குடும்பத்தில் நன்மைகள் பெருகும்.)
வேண்டுவன எல்லாம் தரும் மகாலட்சுமி துதி)
கல்யாணனாமவிகலநிதி: காபி காருண்யஸீமா
நித்யாமோதா நிகமவசஸாம் மௌலிமந்தாரமாலா
ஸம்பத்திவ்யா மதுவிஜயின: ஸந்நிதத்தாம் ஸதாமே
ஸைஷா தேவீ ஸகலபுவனப்ரார்த்தனா காமதேனு:
- தேசிகர் அருளிய ஸ்ரீஸ்துதி
பொருள்:
எல்லாவகை மங்களங்களையும் அருள்பவளே, மகாலட்சுமியே நமஸ்காரம். வெறும் வார்த்தைகளால் அளந்துவிட முடியாத எல்லையற்ற கருணை கொண்டவளே, நமஸ்காரம். என்றென்றும் ஆனந்தம் அளிப்பவளே, நமஸ்காரம்.
வேதங்களை அழகு செய்யும் மந்தாரப் பூமாலை போன்றவளே, நமஸ்காரம். ஸ்ரீமந் நாராயணனின் ஐஸ்வர்யமாக துலங்குபவளே, நமஸ்காரம். உலக மக்களுக்கு காமதேனுவைப் போல் வேண்டிய வரங்களை எல்லாம் தந்தருள்பவளே, மகாலட்சுமியே உனக்கு நமஸ்காரம்.
(இந்த ஸ்லோகத்தை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் சொல்லி வரலாம். குறிப்பாக வரலட்சுமி விரத நாளன்று மகாலட்சுமியின் திருவுருவப் படத்தின் முன் நெய் விளக்கேற்றி தாமரைப்பூ சூட்டி இந்தத் துதியைப் பாராயணம் செய்தால், வேண்டும் வரத்தை வேண்டியவாறே அருள்வாள்)
மன தைரியம் பெருக
திருமகள் திருவருள் கிட்ட...
நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
ஸங்க சக்ரகதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸர்வக்ஞே ஸர்வவரதே ஸர்வதுஷ்ட பயங்கரீ
ஸர்வ துக்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
- இந்திரன் துதித்த லக்ஷ்மி ஸ்தோத்திரம்
பொதுப் பொருள்: மகாலட்சுமி தேவியே நமஸ்காரம். நீயே மகாமாயையாகத் திகழ்கிறாய்; ஸ்ரீபீடம் எனும் உலகின் உயர் பீடத்தில் வாசம் செய்பவள்; தேவர்களால் பூஜிக்கப்பட்டவள். உனக்கு நமஸ்காரம். சங்கு, சக்கரம், கதை இவற்றை கரங்களில் தாங்கி பக்தர்களின் இன்னல் போக்கும் மகாலட்சுமி தேவியே, நமஸ்காரம். எங்கும் வியாபித்திருப்பவள் நீ. எல்லோருக்கும் வரமளித்துக் காப்பவள் நீ. தீயவர்களுக்கெல்லாம் பெரும் பயத்தைக் கொடுப்பவள் நீ. எல்லாவகையான துக்கங்களையும் துடைத்து ஆறுதல் அளிப்பவள் நீ. மகாலட்சுமி தாயே, நமஸ்காரம். எங்களைக் காத்தருள்வாயாக.
இந்தத் துதியைப் பாராயணம் செய்தால், திருமகள் திருவருளால்
துக்கங்கள் விலகி, லட்சுமி கடாட்சம் கிட்டும்.
பறிகொடுத்த சொத்துகளை மீண்டும் பெற
ஆர்த்தா விஷண்ணா சிதிலாச்ச பீதா
கோரேஷு ச வ்யாதிஷு வர்த்தமானா:
ஸங்கீர்த்ய நாராயண சப்தமாத்ரம்
விமுக்தது கா ஸுகினோ பவந்து
கூரேசர் அருளிய நாராயணாஷ்டகம்.
பொருள்:
மனக்கவலை கொண்டவர்கள், துக்கத்தால் வருந்துபவர்கள், சொத்துகளை இழந்தவர்கள், பயம் கொண்டவர்கள், தீராத நோயினால் வேதனையுறுபவர்கள் என அனைவரும் ‘நாராயண’ எனும் திருநாமத்தை உச்சரித்தபோதே அந்த துன்பங்களிலிருந்து விடுபட்டு சுகமடைவார்கள். அப்படியொரு அமைதியை எங்களுக்கு அளிப்பாய் நாராயணா!
(தினமும் சொல்லக் கூடிய இந்த ஸ்லோகத்தை, குறிப்பாக வைகுண்ட ஏகாதசி நாளன்று, பாராயணம் செய்தால் ஸ்ரீமன் நாராயணன் எல்லா நலன் களையும் தருவார்.)
contd: 2