ராமாயணத்தில் மூன்றுவித தர்மங்களை பகவான் உபதேசிக்கிறார்... அவை என்னவென்றால்,
சேஷத்வம்,பாரதந்த்ரியம்,பாரதந்த்ரிய காஷ்ட என்பவையே .
சேஷத்வம் என்றால் 'கட்டிப் பொன்போலே' என்று அர்த்தமாகும்.
ராமாவதாரத்திலே இளைய பெருமாளாகக் கருதப்படும் லக்ஷ்மணன் செய்த கைங்கர்யம் சேஷத்வம் போன்றதாகும் .--அப்படியே கடினம். இரவு பகல் கண் விழித்து, கூட இருந்தபடியே கைங்கர்யம் பண்ணுவதென்பது ரொம்ப கஷ்டமான செயலாகும். எல்லோராலேயும் செய்யக்கூடிய கார்யம் இல்லை அது. ஆனால் லக்ஷ்மணன் அதைச் செய்தான்.
ராமாயணத்தில் லக்ஷ்மணன் குறித்துப் பேசும்போது ' இமைத்திலன் நயனம் என்றான் ' என்று சொல்லப்படுகிறது.இதற்கு அர்த்தமென்ன?? எம்பெருமானும் சீதாப் பிராட்டியும் வனவாசத்தின்போது கண் துயில்கிறார்கள்.அப்போது வெளியிலே நின்று, இமைக்காமல், வெயில், பகல், இரவென்றில்லாமல் காவல் காத்தானே ! கண்ணை இரப்பை காப்பதுபோல் காத்தான் என்பது தான் இவ்வாக்கியத்திற்குப் பொருளாகும்.
இந்த வனவாசத்தின் போது ஸ்ரீ ராமனுக்கு பரதனின் வாயிலாக தமது தந்தை தசரதச் சக்கரவர்த்தி மாண்டுபோன செய்தி எட்டுகிறது.. அப்போது ராமபிரான் லக்ஷ்மணனுக்கு அந்த செய்தியை எப்படிச் சொன்னான் என்பதைப் பாருங்கள்,,,,,,,
'ஹே லக்ஷ்மணா! நீ உனது தந்தையை இழந்தாயடா! " என்றான்.
தசரதன் லக்ஷ்மனனுக்குத் தான் தந்தையா? ராமபிரானுக்குத் தந்தையில்லையா ?? பின் ஏ து ராமன் லக்ஷ்மணனைப் பார்த்து இவ்விதம் சொன்னான்??
தன்னைக் காட்டுக்கு அனுப்பியதால் தந்தை தசரதர் மீது கோபம் கொண்ட ராமன் அவர் தனது தந்தையே இல்லையே என்ற முடிவுக்கு வந்து, அதனால் லக்ஷ்மணனிடம் அவ்விதம் கூறினாரோ? சிற்றறிவு படைத்த சாதாரண மானிடருக்கு இவ்விதம் தான் சந்தேகம் வரும்! ஆனால் இந்த வாக்கியத்திற்கு மகான்கள் தரும் வியாக்கியானம், விளக்கமென்ன .......
.."லக்ஷ்மணா!!உன்னையும் அப்பா சிருஷ்டி பண்ணினார். நானும் அவருக்குப் பிறந்தேன்.என்னோடு வனவாசம் வந்திருக்கும் நீ எனக்கு எல்லாக் கைங்கர்யங்களையும் பண்ணிக் கொடுக்கிறாய் . எப்படிக் கொடுக்கிறாய் என்றால், ஒரு தந்தை தனது தனயனுக்கு என்னென்ன வேண்டும் என்று பார்த்துப் பார்த்துச் செய்வாரோ, ...அதைப் போல் செய்கிறாய். அதனால், நீ இருப்பதால் தந்தை இல்லாத குறை எனக்குத் தெரியப்போவதில்லை. இப்போது தசரதச் சக்கரவர்த்தியின் மறைவினாலே உனக்குத் தானடா தந்தை இல்லாமல் போனார்" என்று சொல்கிறானாம்.
எத்தனை உயர்ந்த வாக்கியம் அது!!சகோதரர் வாத்சல்யமும், தந்தையிடத்தில் பகவான் கொண்ட அன்பும் தெரிகிறது, இதன் மூலம்.
"புத்திரனான நான் அவரை விட்டு காட்டுக்குப் போனதால் பிரிவாற்றாமை தாங்காமல் உயிர்நீத்தார் என் தந்தை; பதினாலு வருடங்கள் கழித்து திரும்பி வந்துவிடப்போகிறேன் என்று தெரிந்தும் பிரிவு தாங்காமல் உயிர் நீத்த என் தந்தை எங்கே? தந்தை இறந்த செய்தியைக் கேட்டும் இன்னும் உயிரோடு இருக்கும் அவரது புத்திரன் நான் எங்கே? இம்மாதிரி தந்தை எத்தனை புத்திரர்களுக்குக் கிடைப்பார்??" என்று பேசுகிறான், புலம்புகிறான் ராமன்.
அந்த ஒப்பற்ற தந்தைக்கும் நிகரானவன் லக்ஷ்மணன் என்று லக்ஷ்மணன் செய்த காரியத்தைக் கொண்டாடுகிறான், ராமன்..
இப்போது லக்ஷ்மண கைங்கர்ய மஹாத்மியம் பற்றிக் காண்போம் ...இராமனைப் பிரியாமல் கூடவே இருந்ததால் லக்ஷ்மணனுக்கு அபக்யாதியே (அபகீர்த்தி) ஏற்படவில்லை.
ஆனால் பரதனுக்கு அப்படியில்லை. கொஞ்ச காலம் ராமனைப் பிரிந்து கேகய நாட்டுக்குப் போனான்.
எத்தனை உயர்ந்த வாக்கியம் அது!!சகோதரர் வாத்சல்யமும், தந்தையிடத்தில் பகவான் கொண்ட அன்பும் தெரிகிறது, இதன் மூலம்.
"புத்திரனான நான் அவரை விட்டு காட்டுக்குப் போனதால் பிரிவாற்றாமை தாங்காமல் உயிர்நீத்தார் என் தந்தை; பதினாலு வருடங்கள் கழித்து திரும்பி வந்துவிடப்போகிறேன் என்று தெரிந்தும் பிரிவு தாங்காமல் உயிர் நீத்த என் தந்தை எங்கே? தந்தை இறந்த செய்தியைக் கேட்டும் இன்னும் உயிரோடு இருக்கும் அவரது புத்திரன் நான் எங்கே? இம்மாதிரி தந்தை எத்தனை புத்திரர்களுக்குக் கிடைப்பார்??" என்று பேசுகிறான், புலம்புகிறான் ராமன்.
அந்த ஒப்பற்ற தந்தைக்கும் நிகரானவன் லக்ஷ்மணன் என்று லக்ஷ்மணன் செய்த காரியத்தைக் கொண்டாடுகிறான், ராமன்..
இப்போது லக்ஷ்மண கைங்கர்ய மஹாத்மியம் பற்றிக் காண்போம் ...இராமனைப் பிரியாமல் கூடவே இருந்ததால் லக்ஷ்மணனுக்கு அபக்யாதியே (அபகீர்த்தி) ஏற்படவில்லை.
ஆனால் பரதனுக்கு அப்படியில்லை. கொஞ்ச காலம் ராமனைப் பிரிந்து கேகய நாட்டுக்குப் போனான்.(அவன் மாமா யுதாஜித் என்பவர் பரதனைத் தன்னுடன் அழைத்துச் சென்றார்). கொஞ்சம் பிரிந்து இருந்த பரதனுக்கு தீராத பழி வந்தது. அதனை அனுபவித்தான் பரதன்.
இந்த விஷயத்தில் ஒன்றை நாம் கிரஹிக்க வேண்டும். லக்ஷ்மணன் பிரியாமல் இருந்ததால் அபகீர்த்தி இல்லை. பரதன் சிறிது காலமே பிரிந்திருந்தாலும் அவனுக்குத் தீராத பழி... அதனால் இளையபெருமான் லக்ஷ்மணன் செய்த கைங்கர்யம் மிக உயர்ந்ததாகக் கருதப்படுகின்றது .....எல்லோராலும் செய்ய முடியாதது....சேஷத்துவம் அதுவே....
ஆதாரம்:::::குறை ஒன்றும் இல்லை ...முக்கூர் லக்ஷ்மிநரசிமாச்சார்யார் .என்பவர் பரதனைத் தன்னுடன் அழைத்துச் சென்றார்). கொஞ்சம் பிரிந்து இருந்த பரதனுக்கு தீராத பழி வந்தது. அதனை அனுபவித்தான் பரதன்.
இந்த விஷயத்தில் ஒன்றை நாம் கிரஹிக்க வேண்டும். லக்ஷ்மணன் பிரியாமல் இருந்ததால் அபகீர்த்தி இல்லை. பரதன் சிறிது காலமே பிரிந்திருந்தாலும் அவனுக்குத் தீராத பழி... அதனால் இளையபெருமான் லக்ஷ்மணன் செய்த கைங்கர்யம் மிக உயர்ந்ததாகக் கருதப்படுகின்றது .....எல்லோராலும் செய்ய முடியாதது....சேஷத்துவம் அதுவே....
ஆதாரம்:::::குறை ஒன்றும் இல்லை ...முக்கூர் லக்ஷ்மிநரசிமாச்சார்யார் .
Comment