Announcement

Collapse
No announcement yet.

திருப்பாவை பாசுரம் 29

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்பாவை பாசுரம் 29

    சிற்றஞ் சிறு காலே வந்துன்னைச் சேவித்து உன்
    பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்!
    பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
    குற்றேவல் எங்களை கொள்ளாமல் போகாது
    இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா!
    எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
    உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
    மற்றை நம் காமங்கள் மாற்று ஏல் ஓர் எம்பாவாய்
    சிற்றஞ்சிறுகாலே - பொழுது விடிவதற்கு மிகவும் முன்னால்;
    பொருள் - காரணம், பலன் என்னவென்றால்; பெற்றம் - பசுக்கள், கறவைகள்;
    குற்றேவல் - உனக்கு பணிவிடை செய்ய, ஏவியதைச் செய்ய; இற்றை - இன்று;
    பறை கொள்வான் அன்று - பறையைப் பெற்றுக் கொள்வதற்கு மட்டுமல்ல,
    உன் சன்மானத்தை மட்டும் அடைந்து போய் விடுவதற்கு அல்ல;
    எற்றைக்கும் - என்றும், காலமுள்ள அளவும்; உற்றோமே - உறவு உடையவர்களே;
    ஆட்செய்வோம் - அடிமை வேலை செய்வோம்; காமங்கள் - ஆசைகள்;

    Pasuram 29 - English Translation
    Erelong dawn we have come unto Thee, to entreat-
    All-hail, Thy foot lotus golden;
    Thou shouldst hearken our motive!
    Born in a tribe to graze the pastoral and eat
    Thou shalt not let go our menial service depriv'd
    Lo! Govinda! This day not the drum alone is gotten!
    Forever seven and seven more births
    Related to Thy bond will we be near;
    Only unto Thee, we serve sincere
    Converse our passions to vanish;
    Listen and consider, our damsel.
Working...
X