உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தன காண்! மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண்
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர் பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்
உந்து மத களிற்றன் - மத ஜலத்தைப் பெருக விடுகின்ற பலமுள்ள யானையை உடையவன், யானையைப் போன்றவன் ;
கந்தம் - பரிமளம்; மாதவிப் பந்தல் - குருக்கத்திக் கொடிப் பந்தல், மல்லிகைப்பூ கொடிப்பந்தல்;
பல்கால் - பல தடவை; பந்தார் விரலி - பந்தைப் பற்றியிருக்கும் விரல்களை உடையவன்;


Pasuram 18 - English Translation
Oh! Daughter-in-law of Nandagopala-
Who hath a shoulder mighty, never a fleer
A valiant tusker emitting vigour; atop jasmine arcade
Again 'n' again flock of larks had cooed;
Nappinnai! Thy hair perfume fragrant, door thou open!
Cock come around, hath crowed with rigour;
Thou art asleep, ball agrip, as we sing thy groom;
Come along! Throw open delight'd;
To clang thy bangle bright,
In pinky lotus hand a sight;
Listen and consider our damsel.