My grand son was born on Panguni month - Revathi Star. The first star birth day comes on 25-3-2020. Apart from Ayush Homam and ear ring ceremony. what are the other mandatory homam to be performed on this day. Yogam is not good on that day. The auspicious timings for ear ring ceremony may please be advised.
Announcement
Collapse
No announcement yet.
AYUSH HOMAM
Collapse
X
-
Re: AYUSH HOMAM
My grand son was born on Panguni month - Revathi Star. The first star birth day comes on 25-3-2020
. Apart from Ayush Homam and ear ring ceremony. what are the other mandatory homam to be performed on this day. Yogam is not good on that day. The auspicious timings for ear ring ceremony may please be advised.
-
Re: AYUSH HOMAM
Originally posted by Ramanathan View PostMy grand son was born on Panguni month - Revathi Star. The first star birth day comes on 25-3-2020. Apart from Ayush Homam and ear ring ceremony. what are the other mandatory homam to be performed on this day. Yogam is not good on that day. The auspicious timings for ear ring ceremony may please be advised.
1) Yogam can not be checked for Star Brithday, that should be done on that day only.
2) Nothing is mandatory except Ayushya Homam
3) optionally if you feel the ear piercing should be done on a good yogam day, you can do that seperately before or after birth day,
ladies will suggest should be done before 1st birth day to keep the odd year.
nvs
Comment
Re: AYUSH HOMAM
அப்த பூர்த்தி:--.முதலாம் ஆண்டு நிறைவு.
துஷ்ட கிரஹங்களினால் முதல் ஆண்டு நிறைவடையும்போது , சிசுவுக்கு பெரிய சங்கடங்கள் விளைகின்றன.. அந்த தோஷங்களுக்கு பரிஹாரமாக விதிப்படி சாந்தி செய்ய வேண்டும்.
ஆண்டு நிறைவு சாந்தி , குழந்தையின் ஆயுளை வ்ருத்தியாக்கும். .விதிப்படி ஆசாரியரை கொண்டு குழந்தைக்கு சாந்தி செய்விக்க வேண்டும். முதல் ஆண்டு நிறைவுக்கு பிறகு மாதா மாதம் ஜன்ம நக்ஷத்திரத்தில் சாந்தி செய்து , சிசுவுக்கு இரண்டாம் வயது முடிந்து மூன்றாம் வயது ஆரம்பிக்கும் ஜன்ம நக்ஷத்திரத்தன்று சாந்தி கர்மாவை நிறைவு செய்ய வேண்டும்.
சங்கவ காலத்தில் அதாவது காலை 8-24 முதல் 10-48 வரை சாந்திகள் செய்யப்பட வேண்டும்.
முதலில் குழந்தைக்கு தைலம் தடவி ஸ்நானம் செய்விக்க வேண்டும்.. குருமார்கள், அந்தணர்கள், தெய்வங்கள் ஆகியோரை வணங்கவும்.
குழந்தைக்கு இடுப்பு கயிறு கட்டவும். சிரஸில் புஷ்பம் சூட்டவும்.. ப்ராஹ்மணர்களிடம் அனுக்ஞை பெற்றுக்கொள்ளவும் புண்யாகவாசனம் .விக்னேச்வர பூஜை செய்யவும். சங்கல்பம் செய்து கொள்ளவும். விக்னேஸ்வரர் யதாஸ்தானம் செய்யவும்.
ஆசாரியரை, ருத்விக்குகளை வரித்துக்கொள்ளவும். த்ரயம்பக மந்திரம், ருத்ரம், சமகம், புருஷ சூக்தம், விஷ்ணு சூக்தம், பூ ஸூக்தம், ஶ்ரீ ஸூக்தம்,ப்ருஹ்ம ஸூக்தம், வருண ஸூக்தம், ருத்ர ஸூக்தம், ம்ருத்யு ஸூக்தம், ஆயுஷ்ய ஸூக்தம், பவமாநம், பஞ்ச சாந்தி. கோஷ சாந்தி. நமோ ப்ருஹ்மண ருக் ஆகியவை எல்லோரும் ஜபிக்கட்டும்.
கும்பத்தின் மேற்கு பக்கம் ஸ்வ க்ருஹ்யப்படி அக்னி ப்ரதிஷ்ட்டாபனம் செய்து பூர்வாங்கம் செய்யவும்.
தயிர், தேன், நெய் ஆகியவற்றை கலந்து அருகம்புல் நுனியால் ஹோமம் செய்யவும் .த்ரயம்பகம் மந்த்ரத்தால் 108 ஆஹூதிகள் அளிக்கவும். குழந்தையின் ஜன்ம நக்ஷத்திர மந்திரத்தால் 12 ஆஹூதிகள் கொடுக்கவும். ஆயுஷ்ய ஹோமம், ஜயாதி ஹோமம் செய்யவும் .உத்தராங்க அக்னி கார்யம் செய்து முடிக்கவும்.
கும்பத்திலிருந்து ருத்ரனை யதாஸ்தானம் செய்யவும்.. கும்ப ஜலத்தை குழந்தைக்கு கொடுக்கவும். வேத மந்திரங்கள் சொல்லி ப்ரோக்ஷீக்கவும். ஆசீர்வாதம், ப்ராஹ்மண போஜனம். , வஸ்த்ரம், ஆபரணம் தானமளிக்கவும்..
.
போதாயனர் மஹரிஷி ப்ரகாரம் ஆயுஷ்ய ஹோமம்.
வருடா வருடம், அல்லது ஆறு மாதத்திற்கு, அல்லது நான்கு மாதத்திற்கு அல்லது இரண்டு மாதத்திற்கு அல்லது மாதா மாதம் அல்லது ஜன்ம நக்ஷதிரதன்று (ஆயுஷ்ய) சருவினால் ஆஹூதி அளித்து ஹோமம் செய்ய வேண்டும்.சரு இரண்டாக பிறிக்கபடு.ம். ஆயுஷ்ய சரு மற்றும் ஹோம சரு என்று. .
அநுக்ஞை, புண்யாஹவசனம், விக்னேச்வர பூஜை செய்யவும்.ஸங்கல்பம் செய்யவும்.தேவ யஜன உல்லேகனம் தொடங்கி ப்ரணீதா வரை செய்க.
அக்னய ஆயுஷ்மதேத்வா ஜுஷ்டம் நிர்வபாமி என்ற மந்திரத்தை ப்ரயோகித்து அக்னிசரு நிர்வாபனம் செய்க.
ப்ராணாயத்வா ஜுஷ்டம் நிர்வபாமி என்ற மந்திரத்தை ப்ரயோகித்து ப்ராண சரு நிர்வாபனம் செய்க. அடுத்து அரிசியை சுத்தம் செய்து தேவையான அளவு ஜலம் அல்லது பால் விட்டு அடுப்பில் ஏற்றி ஹவிஸ் தயாரித்தல்.
அக்னய ஆயுஷ்ம தேத்வா ஜுஷ்டம் நிர்வபாமி என்று சொல்லி அக்னி சரு நிர்வாபனம்=( அக்னியில் காட்டி இறக்குதல்). ப்ராணாயத்வா ஜுஷ்டம் நிர்வபாமி என்று சொல்லி ப்ராண சரு நிர்வாபணம். . நெய்யினால் மூன்று முறை அபிகாரம் செய்தல். வடக்கு பக்கமாக இறக்கவும். மீண்டும் நெய்யினால் அபிகாரம் செய்தல்.
அடுத்து பரிதி பரிதானம் செய்து அக்னி முகம் வரை செய்க. அடுத்து ஆயுஷ்ய சரு கொண்டு அவதான முறைப்படி அவதானம்.. ஆயுஷ்டே விச்வதோ தததி என்ற மந்திரத்தால் புரோநுவாக்கியம் சொல்லி , ஆயுர்தா அக்ன என்ற மந்திரத்தால் யாஜ்யயா ஆஹூதி. ஆயுர்தே அக்னய இதம் ந மம – இது உத்தேச த்யாகம்.
ஸ்வஷ்டக்ருதம் எடுத்து வைக்க வும். அந்த: பரிதியை எடுத்து விடுக.
ஆஜ்யத்தால் உப ஹோம ஆஹூதிகள். அளித்திடுக. அக்னிக்கும் ஆஜ்ய ஸ்தாலிக்கும் நடுவே ப்ராண சருவை வைத்துகொண்டு , ஒவ்வொரு ஸ்வாஹா காரத்தின் மிகுதி நெய்யை ( ஸம்பாத) சருவில் விடவும்.
யோ ப்ருஹ்மா ப்ருஹ்மண் என்று தொடங்கும் எட்டு மந்திரங்களால் ஹோமம். ருத்விக்குகள் வரிக்கப்பட்ட எண்ணிக்கையை கொண்டு பிரித்துகொண்டு 1008 ஆஹூதிகள் அளிக்கவும்.
ஹவ்யவாஹம், ஸ்விஷ்டக்ருத் , ஜயாதி ப்ருஹ்ம தக்ஷிணை வரை க்ரியைகளை செய்யவும்.
அக்னிக்கு வெளியே வடகிழக்கு மூலையில் அருகம்பில்லை பரப்பி அதன் மீது மாநோ மஹாந்தம் , மாநஸ்தோக இந்த இரண்டு மந்திரங்களால் பலி அளித்திடவும்.
அக்நியின் மேற்கே அமர்ந்து ப்ராண சருவில் சிறிதளவு எடுத்துக்கொண்டு , “”ஆயுரஸி விஸ்வாயுரஸி ++++++ஆயுர்கோஷம் என்ற மந்திரம் உரைத்து , குடும்பத்தாருடன் உட் கொள்ளவும். ஆசமனம் செய்யவும். யத இந்திர,,, ஸ்வஸ்திதா விசஸ்பதி : என்ற இரண்டு மந்திரங்களை சொல்லி வயிற்று பகுதியை தடவிக்கொள்ளவும்.
குழந்தைக்கு க்ரஹ தோஷமோ, ஜ்வரம் போன்ற உபாதைகளோ பீடித்திருந்தால் , ஸ்வ ஸூத்ரப்படி இதே மந்திரங்களால் ஆஹூதிகள் அளிக்கவும்
இதே மந்திரங்களால் பலி இடவும்..இதனால் அந்த குழந்தை பீடைகளிலிருந்து விடுப்பட்டவனாவான். இவ்வாறு கூறுகிறார் போதாயன மஹரிஷி.
Comment
copyright 2020- 2025 brahminsnet.com
Powered by vBulletin® Version 5.6.5
Copyright © 2025 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
Copyright © 2025 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
All times are GMT+5. This page was generated at 09:47.
Comment