Announcement

Collapse
No announcement yet.

பிராம்மணர்கள் -மனசாட்சியுடன் சிந்திப்ப&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பிராம்மணர்கள் -மனசாட்சியுடன் சிந்திப்ப&#

    http://www.proudhindudharma.com/2018/06/blog-post.html


    நாம் பிராம்மணன் என்று சொல்லி கொள்ள, அடிப்படையான சில விஷயங்களை நாம் கடைபிடிக்கிறோமா?
    சற்று மனசாட்சியுடன் சிந்திப்போமே!!

    பிராம்மணனுக்கு கடமையாக கொடுக்கப்பட்டது சந்தியா வந்தனம்.
    இதை செய்ய வேண்டாமா?


    பூணல் வேறு சில ஜாதியினரும் போட்டு கொள்கின்றனர் தெரியுமா?
    பூணல் போட்டால் மட்டும் ப்ராம்மணனா?
    வேறு ஜாதியினர் சந்தியா வந்தனம் செய்ய முடியமா? மற்றவர்களுக்கு கிடைக்காத இந்த பொக்கிஷம் கிடைத்தும் பிராம்மணன் சந்தியா வந்தனம் செய்யாமல் இருக்கலாமா? அடுத்த ஜென்மத்தில் இந்த வாய்ப்பு கிடைக்குமா?


    பிராம்மண பெண்ணாக இருந்தால், தீட்டு, எச்சல் பார்த்து, ஆசாரம் நழுவாமல் தானும் இருந்து, தன் கணவனையும் அவன் பிராம்மணன் என்ற கடமையை செய்ய உற்சாக படுத்த வேண்டாமா?
    'சந்தியா வந்தனம் செய்தால் தான் சாப்பாடு' என்று கணவனை, குழந்தையை தர்மத்தில் இருக்க செய்பவள் தானே தர்ம பத்னி. வெறும் பத்னியாக இருந்தால் போதுமா?


    சமைத்த உணவை, வீட்டில் உள்ள பிரியமான ஸ்வாமிக்கு நெய்வேத்தியம் செய்யாமல் ஒரு பிராம்மண குடும்பம் சாப்பிடுமா?


    ஸ்வாமி அறை என்ன அலங்கார பொம்மைகள் என்று நினைப்பா?
    பூஜை மட்டும் தான் செய்வானா பிராம்மணன்?
    தன் வீட்டில் உள்ள ஸ்வாமிக்கு தினமும் நெய்வேத்யம் செய்யாமல் சாப்பிடுவானா?


    அபார்ட்மெண்ட் மயமாகி போன இந்த உலகில், சுற்றி எத்தனை பிராம்மணன் இருந்தாலும், இன்றைய பத்தில் ஒன்பது பிராம்மணன், 6 மணிக்கு பஞ்சாத்ரம் எடுத்து சந்தியா வந்தனம் செய்வதில்லை.
    அரை டவுசர் போட்டு பார்க்கில் ஒடுகின்றனர், நடக்கின்றனர்.
    பிராணாயாமம் நாடி சுத்தி செய்யும் என்று புரியவில்லையா?
    அபிவாதையே சொல்லும் போது குனிந்து நிமிர்ந்து சொல்லும் போதும் மந்திரம் ஒரு புறம் இருக்க, உடல் ஆரோக்கியமும் உள்ளதே என்று புரியவில்லையா?
    பார்க்கில் அலைவதற்கு பதில், அதே நடையை ஒரு கோவிலை சுற்றி வரலாமே.
    கொஞ்சம் யோசிக்கலாமே பிராம்மணர்கள்.
    நாமும் மற்றவர்களை போல இருந்தால், பிள்ளைகள் வேறு ஜாதி திருமணம் செய்து கொள்ளாமலா இருக்கும்?
    யோசிக்க வேண்டாமா ப்ராம்மணர்கள்?


    இன்றைய பிராம்மண வீட்டில், இருக்கும் பெண்கள், விலகி இருக்கும் சமயமா, இல்லையா என்று கூட தெரிவதில்லை.
    உண்மையான வைதீக பிராம்மணர்கள், லௌகீக ப்ரம்மணர்களை கண்டால் பயப்படுவார்கள்.
    சில உண்மையான வைதீக பிராம்மணர்கள், நாம் பிராம்மணர்கள் என்று சொன்னாலும் தீர்த்தம் குடிக்க கூட தயங்குவது அவர்கள் தவறில்லை. நம் மீது உள்ள ஆசார பயம் தான்.


    பெண்களுக்கு மாதம் 2 நாள் இயற்கையே ஓய்வு கொடுத்து இருக்கும் போது, அன்று ஆண் சமைத்து போட்டு, வீட்டை பார்த்துக்கொண்டான்.


    இன்றைய பிராம்மண குடும்பத்தில் விலகி இருக்க வேண்டிய காலத்திலும் பெண்களே சமைக்கின்றனர்.
    சமைத்த உணவை அவர்களே சாப்பிடுகின்றனர்.
    அவர்கள் வீட்டில் உள்ள தெய்வங்களுக்கு அன்று ஏகாதேசியா?


    நெய்வேத்தியம் செய்யும் பழக்கம் இல்லை என்றால், நம் வீட்டில் உள்ள தெய்வங்களுக்கு காட்டாமல் சாப்பிடுகிறோம் என்று தானே அர்த்தம்?


    நெய்வேத்தியம் செய்யாமல் சாப்பிடும் இந்த பழக்கம் தானே இன்று, விஸ்வரூபம் எடுத்து, பிராம்மண குடும்பத்தில், பெண்கள் தீட்டு காலங்களிலும் இன்று சமைப்பதற்கு காரணம்.


    அப்படி சமைத்து சாப்பிடுவதை விட, பானகம், மோர் என்று சமாளிக்கலாமே.
    அதையே ஸ்வாமிக்கு நெய்வேத்தியம் செய்யலாமே.
    நம் வீட்டில் உள்ள ஸ்வாமி பட்டினி என்றால், நாமும் பட்டினி இருக்கலாமே.


    இப்படி தீட்டு பார்ப்பதும், நெய்வேத்யம் செய்த பின் பிரசாதமாக சாப்பிடுவதும், சந்தியா வந்தனமும், நம் பிராம்மண சமூகத்திடம் 1940ல் இருந்து இன்று வரை பிறந்த பிராம்மணர்களால் அழிக்கபட்டுவிட்டது பெரிய துரதிர்ஷ்டமே.
    இதற்கு முன் இருந்த ப்ராம்மணர்கள் ஆசார சீலர்களாகவே இருந்துள்ளனர்.


    இன்று, பிராம்மண குடும்பத்தில், பிறக்கும் பிள்ளைகள் வேறு ஜாதி, முடிந்தால் வேறு மதம் என்று போய், கலப்பு திருமணம் செய்து கொள்கின்றனர்.


    இது இவர்கள் தவறு என்று மட்டும் சொல்லிவிட முடியுமா? இல்லை.
    இவர்கள் பெற்றோர்கள் செய்த தவறு.


    இந்த காலகட்டங்களில் பிறந்த பெரும்பாலான பிராம்மணர்கள் தங்கள் கடமையை செய்ய தவறியதே இதற்கு காரணம்.


    ஒவ்வொரு ஜாதியிலும் அடி முட்டாள் இருப்பான். அதி புத்திசாலியும் இருப்பான்.


    இன்றைய உலகில் நாம் அனைவரிடமும் பழகுகிறோம்.


    நம் வீட்டில் உள்ள பிராம்மண பையன், வேறு ஜாதியில் அடக்கம், அன்பு, அழகு, திறமை, செல்வம் எல்லாம் சேர்ந்த பெண்ணை பார்க்கிறான். இருவருக்கும் பிடித்து போகிறது. கல்யாணம் செய்து கொள்கின்றனர்.


    பையனை பெற்ற பெற்றோர் எந்த முகத்தை வைத்து, தடுக்க முடியும்?
    நாம் பிராம்மணன். இது தவறு என்று சொன்னால் எடுபடுமா?


    இதே சமயத்தில், பெற்றோர்கள் உண்மையான பிராம்மண கடமைகளை செய்து, நான் ஏன் இதை செய்கிறேன் என்று சொல்லி தந்து இருந்தால், பிராம்மண பையன்,
    தேவதையை பார்த்தாலும்
    "நீ தேவதையாக இருந்தாலும் வேண்டாம். உன் குலத்தில் உள்ள ஒரு பையனை திருமணம் செய்து கொள். எனக்கு பிராம்மண பெண் தான் மனைவியாக வேண்டும்" என்று தானே கேட்பான்.


    அழகான வேறு ஜாதி பெண்ணை பார்த்தாலும்,
    "இவள் நல்லவள் தான். ஆனால், என் பெற்றோருடன், என் தாத்தாவுடன், என் குடும்பத்துடன் இவள் பழக வேண்டுமே.
    இவள் உணவு பழக்கம் எனக்கு கிடையாதே. எங்கள் உணவு பழக்கம் இவள் ஒத்துக்கொள்ள வேண்டுமே?
    இவளை திருமணம் செய்து கொண்டால் நான் எப்படி பிராம்மணன் ஆவேன்? என் தந்தை எனக்கு கொடுத்த சந்தியா வந்தனம் எப்படி செய்வேன்?
    எனக்கு பிறக்கும் குழந்தை எப்படி பிராம்மண குழந்தை என்று சொல்வது?
    இவள் தீட்டு பார்ப்பாளா? இவள் எனக்காக பார்த்தாலும், இவள் குடும்பம் பார்க்குமா? என் பெற்றோர் எப்படி இவர்கள் குடும்பத்துடன் பழக முடியும்?
    இப்படி பல தர்ம சங்கடம் கொடுத்தாவது, இந்த காமம் தேவையா? இப்படியாவது இந்த தேவதையை மணந்து கொள்ள வேண்டுமா? அவள் ஜாதியில் உள்ள ஒரு நல்ல பையன் இவளை திருமணம் செய்து கொண்டு நன்றாக வாழட்டுமே. நாம் ஏன் நம் பிராம்மண குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ கூடாது?
    அப்படி சுயநலம் ஏறி விட்டதா எனக்கு?
    நம்மோடு ஏன் நம் குலத்திற்கு அழிவு கொடுக்க வேண்டும்?"
    என்று நினைப்பான்.


    பிராம்மண பெண்ணாக இருந்தாலும் இந்த உறுத்தல் அவளை நிதானிக்க செய்யும்.


    ஆணின் மனதை விட, பெண்ணின் மனது எளிதில் இளகி விடும்.


    பிராம்மண குடும்பங்களில் பிராம்மண கட்டுப்பாடு மட்டும் விதித்து, ஏன்? எதற்கு? என்று சொல்லாமல் பெண்ணை வளர்த்தால், அவள் உலகில் பலருடன் பழகும் போது, புரியாத கட்டுப்பாடு பெற்றோரிடம் பார்த்து விட்டு, அன்பாக பேசும் நன்றாக சம்பாதிக்கும் ஒரு வேறு ஜாதி ஆணை திருமணம் செய்து கொள்ள சம்மதித்து விடுகிறாள்.


    இன்றைய காலத்தில், பிராம்மண பெண்ணும் வேலைக்கு செல்கிறாள் என்பதை மறுக்க முடியுமா? மற்றவர்களுடன் பழகுவது தவறு என்றும் சொல்ல முடியுமா?


    இதே சமயத்தில், பெற்றோர்கள் உண்மையான பிராம்மண கடமைகளை செய்து, நான் ஏன் இதை செய்கிறேன் என்று சொல்லி தந்து இருந்தால், பிராம்மண பெண்,
    இந்திரதேவனை பார்த்தாலும் "நீ அறிவாளியாக, பணம் உள்ளவனாக, பண்பு உள்ளவனாக, அழகானவனாக இருந்தாலும் வேண்டாம். உன் குலத்தில் உள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள். எனக்கு பிராம்மண பையன் தான் புருஷனாக வேண்டும்" என்று தானே கேட்பாள்?


    அன்பான, சொக்கதங்கமாக வேறு ஜாதி பையனை பார்த்தாலும்,
    "இவன் நல்லவன் தான். ஆனால், என் பெற்றோருடன், என் தாத்தாவுடன், என் குடும்பத்துடன் இவன் பழக வேண்டுமே?
    நான் அவர்கள் குடும்பத்துக்கு புக வேண்டுமே?
    இவர் உணவு பழக்கம் எனக்கு கிடையாதே?
    எங்கள் உணவு பழக்கம் இவன் ஒத்துக்கொள்ள வேண்டுமே?
    இவனை திருமணம் செய்து கொண்டால் நான் எப்படி பிராம்மண பெண் ஆவேன்?
    என் தாய் எனக்கு கொடுத்த ஆசாரம் எப்படி அவர்கள் வீட்டில் செய்வேன்?
    எனக்கு பிறக்கும் குழந்தை எப்படி பிராம்மண குழந்தை என்று சொல்வது?
    இவன் தீட்டு பார்ப்பானா?
    இவன் எனக்காக பார்த்தாலும், இவனது குடும்பம் பார்க்குமா? தீட்டு காலங்களிலும் நான் சமைத்து போட வேண்டும் என்றால் என்ன செய்வது? நெய்வேத்தியம் செய்து சாப்பிடும் பழக்கம் என்னோடு அழிய வேண்டுமே?
    என் பெற்றோர் எப்படி இவர்கள் குடும்பத்துடன் பழக முடியும்?
    இப்படி பல தர்ம சங்கடம் கொடுத்தாவது, இந்த காமம் தேவையா?
    இப்படியாவது இந்த நல்லவனை, அன்பானவனை மணந்து கொள்ள வேண்டுமா?
    அவன் ஜாதியில் உள்ள ஒரு நல்ல பெண் இவனை திருமணம் செய்து கொண்டு நன்றாக வாழட்டுமே.
    நாம் ஏன் நம் பிராம்மண குடும்பத்தில் உள்ள ஒரு பிராம்மண பையனை திருமணம் செய்து கொண்டு வாழ கூடாது?
    அப்படி சுயநலம் ஏறி விட்டதா எனக்கு?
    நம்மோடு ஏன் நம் குலத்திற்கு அழிவு கொடுக்க வேண்டும்?"
    என்று நினைப்பாள்.


    பிராம்மணர்களின் பெருமையை பெற்றோரின் நடவடிக்கையிலும், பேச்சிலும் கேட்டு இருந்தால், நாமம் போட்ட ஐயங்கார் பையனை கண்டால், இந்த காலத்திலும் தான் பெருமாளின் திருவடியை நெற்றியில் இட்டு கொள்வேன் என்று உண்மையான ஆண் மகனாக இருக்கும் பிராம்மண பையனை பார்த்து அல்லவா பெருமைப்படுவாள்?


    உலகிற்கு பயந்து வெளி வேஷத்தை மாற்றும் பிராம்மணன் நெஞ்சு உரம் உள்ளவனா?
    இல்லை இன்றும் குடுமி வைத்துக்கொண்டும், நெற்றியில் நாமம் இட்டுக்கொண்டும் இருக்கும் ஒரு சில பிராம்மண பையன்கள் நெஞ்சு உரம் மிக்கவர்களா?


    உலக கேலிகளை சந்திக்காமலா இவர்கள் இருப்பார்கள்?
    இஸ்லாமியன் வெட்கப்படுவதில்லை. மீசை இல்லாமல் தாடி வைத்து பெரும்பாலும் ஹிந்துக்கள் இருக்கும் இந்தியாவில் நடக்கிறோமே, கேலி செய்வார்களே என்று தன் வேசத்தை மாற்றி கொள்வதில்லை.
    வைஷ்ணவனான நானும் வெட்கப்படுவதில்லை என்று இருக்கும் நெஞ்சு உரம் மிக்க பிராம்மண பையன்கள் இன்றும் இருக்கின்றனர்.


    முதலில் நாம் பிராம்மணன் ஆக இருப்போம்.
    சந்தியா வந்தனம் செய்வோம்.
    நெய்வேத்தியம் செய்து விட்டு பிரசாதமாக சாப்பிடும் பழக்கத்தை கொள்வோம்.
    தீட்டு, ஆசாரம் பார்ப்போம்.


    தானாக பிராம்மண தலைமுறை திருந்தும்.


    தானாகவே இந்த கலப்பு திருமணங்கள் நின்று போகும்.


    சட்டத்தை கொண்டு தடுக்க முடியுமா மனதில் எழும் காமத்தை?
    நம்மால் நமக்கு பின் வரும் பிள்ளைகள் பிராம்மணத்துவத்தை இழக்க நேரிடும் என்ற ஆழ் மனதில் தோன்றும் அச்சமே, நம்மை பிராம்மணனாக வாழ வைக்க முடியும்.
Working...
X