ராவணன் சீதையை அபகரித்து இலங்கைக்கு கொண்டு சென்று விட்டான்.
அசோக வனத்தில் சிறை வைக்கப்பட்ட சீதை, ஸ்ரீராமர் வந்து காப்பாற்றுவார் என்று பத்து மாதங்கள் காத்திருந்தாள்.
சீதையை மீட்க, பெரும் வானர படை திரட்டி, கடலில் சேது அமைத்து, பெரும் போர் செய்து, ராவணன் 10 தலையையும் கீழே தள்ளி, வெற்றி பெற்று, விபீஷணனை இலங்கை அரசனாக்கி, மகிழ்ச்சியுடன் விபீஷணனை பார்த்து, சீதையை தன்னிடம், அழைத்து வர சொன்னார் ஸ்ரீ ராமர்.
சீதையை சகல மரியாதையுடன் மூடு பல்லக்கில் அழைத்து வந்தார் விபீஷணன்.
எந்த சீதைக்காக, தங்கள் உயிரை கூட தியாகம் செய்ய தயாராக இருந்தார்களோ, அந்த வானரர்கள், சீதையை தரிசனம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்ட ஸ்ரீ ராமர், பல்லக்கை விட்டு இறங்கி நடந்து வர சொன்னார்.
பெண்ணாக இருப்பதால், வானரர்களாக இருந்தாலும் ஆண் வர்க்கம் ஆயிற்றே என்பதாலோ என்னவோ, சீதை திடீரென்று, தன் முகத்தை தன் புடவையால், மூடி கொண்டு ஸ்ரீ ராமர் முன் வந்தாள்.
சீதையை மீட்க ராவணனை கொன்று, மகிழ்ச்சியுடன் சீதையை அழைத்து வர சொன்ன ஸ்ரீ ராமர், சீதை அருகில் வந்தவுடன், அவளை பார்க்க கூட இஷ்டப்படாமல், எங்கோ பார்த்து கொண்டு, யாரும் எதிர்பார்க்காத கடும் சொற்களை பேசினார்.
இந்த கடும் சொற்களை கேட்ட சீதை, லக்ஷ்மணரை பார்த்து, "எனக்கு அக்னியை மூட்டு, நான் அக்னி பிரவேஷம் செய்யப்போகிறேன்." என்றாள்.
ஸ்ரீ ராமர் இப்படி பேசியதும், சீதை இதற்கு அக்னி பிரவேசம் செய்ய முடிவெடுத்ததும் கூட ஆச்சரியமில்லை.
அக்னியை மூட்டுவதா, இல்லையா? என்று நினைத்த லக்ஷ்மணர், ஸ்ரீ ராமரை பார்த்தார். ஸ்ரீ ராமர் முகத்தில் சம்மதம் தெரிந்தது. உடனே அக்னி மூட்டிவிட்டார்.
ஸ்ரீ ராமருக்காக சீதையை இலங்கை சென்று பார்த்து வந்த ஆஞ்சநேயரும் இங்கு நடக்கும் நிகழ்வை கண்டு துக்கப்படவில்லை.
வெளியோட்டமாக பார்க்கும் போது, யாரிடமும் கடிந்து பேசாத ஸ்ரீ ராமர், சீதையை பார்த்து ஏன் இப்படி பேசினார் என்று தோன்றும்.
இதற்கு பதிலாக, ஏன் சீதையும், உடனே அக்னி பிரவேசம் செய்கிறேன் என்று சொன்னாள் என்றும் தோன்றும்.
நடப்பது அநியாயம் போல தோன்றும் இந்த நிகழ்வில், ஏன் ஹனுமனும், லக்ஷ்மணனும் அமைதியாக இருந்தனர் என்றும் கேள்விகள் தோன்றும்.
ஸ்ரீ ராமரும், சீதையும் திவ்ய தம்பதிகள்.
சாதாரண தம்பதிகளுக்கும், திவ்ய தம்பதிக்கும் பல வித்யாசம் உண்டு.
சாதாரண உலக தம்பதிகளுக்கு, மற்றவர் என்ன சொல்ல நினைக்கிறார், என்ன ஆசைப்படுகிறார் என்பதை சொன்னால் தான் புரிந்து கொள்ள முடியும்.
திவ்ய தம்பதிகளுக்கு, தன் கணவனோ, மனைவியோ என்ன சொல்ல நினைக்கிறார், என்ன ஆசைப்படுகிறார் என்பதை அவர்கள் குறிப்பு அறிந்தே புரிந்து கொள்ள முடியும்.
திவ்ய தம்பதிகள் தன் தேவைகளுக்கு பேச கூட அவசியமில்லாமல் இருப்பர். அவர்கள் பேசினால், பேசுவதற்கு ஆசை பட்டு தான் பேசுவர்.
இப்படிப்பட்ட திவ்ய தம்பதிகள் ஸ்ரீ ராமரும், சீதையும் என்பதை நாம் மறக்க கூடாது.
நம்மை போன்ற சாதாரண தம்பதிகள் என்ற பார்வையில் பார்த்தாலே, அது நமக்கு பாவத்தை தரும்.
இவர்கள் சாக்ஷாத் அந்த விஷ்ணுவும், லட்சுமியும் என்ற உணர்வில் பார்க்க வேண்டும்.
உண்மையில் என்ன நிகழ்ந்தது ?
ஸ்ரீ ராமர், ராவணனை கொன்ற பின், விபீஷணனை பார்த்து சீதையை சகல மரியாதையுடன் அழைத்துவர சொன்னார்.
மேலும்,
சுக்ரீவனும் அவனுடைய சேனைகளும், யாருக்காக தன் உயிரையும் தியாகம் செய்ய இருந்தார்களோ, அவர்களுக்கு அந்த சீதையை தரிசனம் கிடைக்க செய்வது என்று கருணை கொண்டார் ஸ்ரீராமர்.
இதன் காரணமாக, சீதையை ஸ்நானம் செய்து, சர்வ ஆபரணத்துடன் சேனைகளுக்கு நடுவே அழைத்து வருமாறு சொன்னார்.
பத்து மாதம் சிறையில் இருந்த சீதையை, விபீஷணன் தன் மனைவியை முன்னிட்டு, ஸ்ரீ ராமர் தங்களை பார்க்க ஆவலாகவும், அழைப்பதாகவும் சொன்னார்.
இந்த ஒரு சொல்லுக்காக காத்திருந்த சீதை, உடனே கிளம்ப தயாரானாள்.
மேலும் ஸ்ரீ ராமர், சீதையை ஸ்நானம் செய்து, சர்வ ஆபரணத்துடன் அழைத்து வருமாறு சொன்னதாக சொன்னார்.
ஸ்ரீ ராமர் விருப்பம் எதுவோ, அதை எற்றுகொள்பவள் சீதை.
பணிப்பெண்களும், விபீஷணனின் பத்னியும், சீதைக்கு ஸ்நானம், அலங்காரம் செய்து, மூடு பல்லக்கில், மகாராணி சீதையை சர்வ மரியாதையுடன் அழைத்துக் கொண்டு, ஸ்ரீ ராமரை நோக்கி வந்தனர்.
வானர சேனைகள் சீதையை காண முடியாமல், மூடு பல்லக்கை ஆச்சர்யமாக பார்த்தனர்.
வானர படைகளின் "ஜெய் ஸ்ரீ ராம்" என்ற கோஷம் விண்ணை முட்டியது.
வானரர்கள் யாருக்காக தன் உயிரையும் துறக்க துணிந்தார்களோ, அவர்களுக்கு சீதையின் தரிசனம் கிடைக்க வேண்டும் என்று எண்ணினார் ஸ்ரீ ராமர்.
உடனே, ஸ்ரீ ராமர், வானரர்கள் சீதா தேவியை பார்க்க வேண்டும் என்ற கருணையால், மூடு பல்லக்கு இல்லாமல், சீதையை சகல மரியாதையுடன் நடந்து வருமாறு அழைத்து வர சொன்னார்.
கம்பீரமான, தாயுள்ளம் கொண்ட சீதை, மகிழ்ச்சியுடன் பெரும் சேனைக்கு நடுவே ஸ்ரீ ராமரை நோக்கி நடக்கனானாள்.
தனக்காக பெரும் படையை திரட்டி, ஜெயராமனாக இருக்கும் ஸ்ரீராமரை காணப்போகிறோம் என்று ஆனந்தப்பட்டாள் சீதை.
பெரும் வானர படை வீரர்களை கண்டு, ஸ்ரீ ராமருக்கும், தனக்கும் கிடைத்த குழந்தைகள் போல நினைத்தாள். தாயுள்ளதோடு அனைவரையும் கண்டாள்.
சீதையை கண்டதும், பேரிரைச்சல் உண்டானது.
வானர்கள்,
"இதோ சீதா மாதா...",
"ஆஹா... இவள்தான் சீதா தேவியோ !",
"சீதா ராம் கீ ஜெய்"
என்று எங்கும் பேரிரைச்சல் உண்டானது.
மூடு பல்லக்கில் வரும் வரை மனம் சஞ்சலம் அடையாமல், ஸ்ரீ ராமரை அடையப்போகிறோம் என்ற மகிழ்ச்சியில் இருந்தாள் சீதை.
மூடு பல்லக்கில் இருந்து இறங்கி, நடக்கும் பொழுது, வானர படைகளின் பேரிரைச்சல் நடுவில் நடக்கும் போது, சீதைக்கு திடீரென்று மனம் சஞ்சலம் அடைந்தது. பெரும் துக்கம் சூழ்ந்தது.
தன்னை வெளிக்காட்டி கொள்ள விரும்பாத சீதை, உடனே தன் புடவை தலைப்பு கொண்டு, தன் முகத்தை முழுவதுமாக மூடி, அவமானத்தால் கூனி குறுகி நடந்து நடந்து ஸ்ரீ ராமர் முன் வந்து சேர்ந்தாள்.
சீதையின் நிலை எப்படி இருந்தது?
கற்புக்கரசியான சீதை, தான் களங்கப் படாதவளாக இருந்தாலும், பத்து மாதங்கள் ஒருவன் பிடியில் அகப்பட்டதையும், அதனால் உலகம் தன்னையும், ஸ்ரீ ராமரையும் கேட்கப் போகும் கேள்விக்கும், அதனால் ஸ்ரீ ராமருக்கு உண்டாக போகும், தர்ம சங்கடத்திற்கும், தான் காரணமாகிவிட்டோமே என்று தன்னை தானே வெறுத்தாள்.
இப்படி ஒரு நிலையை ஸ்ரீ ராமருக்கு தந்து விட்டோமே என்று சொல்லமுடியாத துக்கம் அடைந்தாள்.
இப்பொழுதே அக்னிப்ரேவேசம் செய்து பிராண ....
Read further on ... http://proudhindudharma.blogspot.in/...g-post_27.html