புருஷன் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன? யார் ஒருவரே புருஷன்?
புருஷன் என்ற சொல்லுக்கு ஆண் என்று அர்த்தம்.
பொதுவாக வேதம், "சஹஸ்ர சீர்ஷ: புருஷ:" என்று பரப்ரம்மமான ஈஸ்வரனை "புருஷன்" என்று மட்டும் சொல்லி அழைக்கிறது.
வேதம், பரப்ரம்மான ஈஸ்வரனை "சஹஸ்ர சீர்ஷ: புருஷ:" என்று சொல்லும் போது, பரப்ரம்மத்தை "புருஷன்" என்று மட்டும் சொல்வதால்,
அவர் இந்திரனா? அக்னியா? ருத்ரனா? விஷ்ணுவா? ப்ரம்மாவா? என்ற சந்தேகம் எழுந்து விடுகிறது.
'அனைத்து உலகத்திற்கு காரணமானவன், காணும் அனைத்துமாகவும் இருக்கும் புருஷன் எவரோ, அவரே பரப்ரம்மம்"
என்று மட்டும் வேதம் சொல்கிறது.
"சஹஸ்ர சீரஷ: புருஷ:"
என்ற இடத்திலும் மட்டுமல்ல,
வேதம் பல இடங்களில் இந்த "புருஷ" என்ற சொல்லை மட்டும் பயன்படுத்துகிறது.
"புருஷயம் புருஷ மீக்ஷதே"
என்று வேதம் இன்னொரு இடத்தில் சொல்கிறது.
அதாவது,
"எல்லாருடைய இதயத்திலும் ஒரு புருஷன் அந்தர்யாமியாக இருக்கிறார். அந்த புருஷனை உள்ளுணர்ந்து பார்"
என்கிறது வேதம்.
இந்த வேத வாக்கியத்தின் அர்த்தத்தை ஒத்த தமிழ் சொல் தான் "கடவுள்".
கடவுள் என்ற சொல்லுக்கு
"கடந்து உள்ளே பார், உனக்குள்ளும் அந்தர்யாமியாக உள்ள புருஷன் தெரிவான்" என்று பொருள்.
இன்னொரு இடத்தில், "பூர்வமேவா: இஹா சமிதி, தத் புருஷஸ்ய புருஷத்வம்"
என்று வேதம் சொல்கிறது.
அதாவது,
"எல்லா படைப்புகளுக்கும் முன், யாராலும் படைக்கப்படாத அந்த புருஷன் மட்டுமே இருந்தார்" என்றும் வேதம் சொல்கிறது.
'புருஷன்', 'புருஷன்'
என்று மட்டும் வேதம் பல இடம்களில் அந்த பரப்ரம்மத்தை சொல்வதால்,
ப்ரம்மா, ருத்ரன், விஷ்ணு மற்றும் பிற தேவதைகளிடத்தில் பக்தி உள்ளவர்கள், வேதத்தில் கூறப்பட்ட அந்த பரப்ரம்மம், அந்த புருஷன், அந்த ஈஸ்வரன், நாங்கள் வழிபடும் தெய்வமே என்று பயன்படுத்துகின்றனர்.
"புருஷயம் புருஷ மீக்ஷதே"
என்ற வேத வாக்கின் படி, அந்த புருஷன், எல்லாருடைய இதயத்திலும் அந்தர்யாமியாக இருக்கிறான் என்பதால், தேவதைகளுக்கு உள்ளும் இருக்கிறான் என்பதால், பரப்ரம்மமாகிய புருஷனுக்கு இது ஒன்றும் குறையில்லை.
இதன் காரணமாக ருத்ரனையோ, ப்ரம்மாவையோ, அந்த புருஷன், அந்த ஈஸ்வரன், அந்த பரமாத்மா என்று வணங்காதே என்று கட்டுப்பாடு இல்லை.
ஆனால் உண்மையான பரப்ரம்மம் யார்?
"புருஷன் என்று தானே வேதம் சொல்லி இருக்கிறது. அது எங்கள் தெய்வத்தை தான் சொல்கிறது"
என்று பக்தனாய் இருப்பவன், தன் தன் இஷ்ட தெய்வத்துக்கு புருஷாய நம: என்ற சொல்லை, ஈஸ்வரன் என்ற சொல்லை பயன்படுத்திக் கொள்கிறான்.
ஆனால் வேதம் எந்த இடத்திலாவது, யார் அந்த புருஷன் என்று சொல்லி இருக்கிறதா என்று கவனித்தால், வேகத்தின் உண்மையான அபிப்ராயத்தை கண்டுபிடிக்க முடிகிறது.
புருஷன் என்று மட்டுமே சொல்லி ஆரம்பிக்கும் வேதம், ஒரு இடத்தில் தெளிவாக
" ह्रीश्च॑ ते ल॒क्ष्मीश्च॒ पत्न्यौ॓"
என்று சொல்கிறது.
மேலும் படிக்க...
http://proudhindudharma.blogspot.in/...ost_7.html?m=1