திருமணச் சடங்கில் ஏழு அடிகள் எடுத்து வைக்கும் சப்தபதி எனும் சடங்கின்போது சொல்லப்படும் மந்திரத்தின் பொருள். …
ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு மந்திரம். அதன் பொருள்:
(1) “”ஏகமிஷே விஷ்ணுஸ் த்வான் வேது”
“பெண்ணே முதலாவது அடியை எடுத்து வைத்தாய். உனக்கு அன்னம் குறைவில்லாமல் அளிப்பதற்காக ஸ்ரீ மஹாவிஷ்ணு நீ வைத்த அடியில் பின் தொடர்ந்து வருவாராக.
(2) “”த்வே ஊர்ஜே”
இரண்டாவது அடியை எடுத்து வைத்தாய். அந்த விஷ்ணுவே உனக்கு உடம்பில் புஷ்டி ஏற்படுவதற்கு உன்னைப் பின் தொடர்ந்து வருவாராக.
(3) “”த்ரீணி வ்ரதாய”
மூன்றாவது அடியை வைக்கும்போது நீ உனது வாழ்நாட்களில் விரதங்களை அனுஷ்டிக்கச் செய்ய மகாவிஷ்ணு பின்தொடர்ந்து வருவாராக.
(4) சத்வாரீ மாயோ பவாய’
ஸகல சுகானுபவத்திற்கும் பகவான் உன்னை அனுசரித்து நான்கடி தூரம் வரட்டும்.
(5) “பஞ்ச பசுப்ய’
பசுக்கள் முதலிய நல்ல ஜீவன்கள் வ்ருத்தியடைவதற்காகப் பகவான் உன்னை ஐந்தடி தூரம் தொடரட்டும்.
(6) “ஷட் ருதுப்ய:’
ஆறு ருதுக்களிலும் ÷க்ஷமமுண்டாக பகவான் உன்னை ஆறடி தூரம் தொடரட்டும்.
(7) “ஸப்த ஸப்தப்யோ ஹோத்ராப்யோ விஷ்ணுஸ்த்வான் வேது’
நீ வாழ்க்கையில் பங்கு கொள்ள வேண்டிய சத் தர்மங்களைக் குறைவின்றி நிறைவேற்றுவதற்காக மகாவிஷ்ணு தொடர்ந்து வருவாராக…”
ஏழாமடியில் “”ஏழடி தூரம் பின்தொடர்ந்து வந்த நீ என் துணைவி ஆகிவிட்டாய். இருவரும் ஏழடி தூரம் சேர்ந்து வந்ததால் ஒருவருக்கொருவர் துணைவன் துணைவி ஆகிவிட்டோம். உன் தோழமையிலிருந்து நான் விலக மாட்டேன். நீயும் என்னை விட்டுப் பிரியக் கூடாது. இருவரும் சேர்ந்து வாழ்வோம். கலந்தாலோசிப்போம். சேர்ந்தே அனுபவிப்போம்.
நீ ரிக் நான் சாமம். நான் ரிக் நீ சாமம்.
நான் ஆகாசம் நான் பூமி ஒன்றை ஒன்று ஆச்ரயித்து இருக்கிறதோ அப்படி நாமும் இணைவோம்” என்று கூறி அக்னியை வலம் வந்து அமர்வர்.
“மந்திரம்’ என்பது பகை சக்திகளிடமிருந்து நம்மைக் காத்துக் கொள்ள முன்னோர்கள் செய்த உபாயம். உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் நன்மை பயப்பதே மந்திரம். வேதங்களும், சனாதன தர்மங்களுமாகிய மதங்கள் நமக்கு சீரமைத்து பக்குவப்படுத்தி, வழிகளைச் சொல்கின்றன. ஒழுக்கத்தை கூர்மைப்படுத்தும் மந்திரங்கள் நன்மை பயக்கும் கருத்துக்கள்.
செங்கோட்டை ஸ்ரீராம் in ஆன்மீக அர்த்தங்கள், மந்திரங்கள் /