"அஞ்சனம்னா எண்ணெய் தடவறது,
மெய் அஞ்சனம் என்றால் உடம்புக்கு எண்ணெய் தடவறது.
திருமெய் அஞ்சனம்னா பகவான் திருமேனிக்கு
எண்ணெய் தடவறது. திருமெய் அஞ்சனம்தான் மருவி திருமஞ்சனம்
ஆயிடுத்து" என விளக்கினார். ..........பெரியவாள் சொன்னது.
ஶ்ரீ:
அந்தப் பாடலில் 4 அசைகளில் 2வது அசைக்கு தோதான ஒரு வார்த்தையை கவிஞன் தேடினான்,
"அஞ்சன மேவிடும் ...." மேவுதல் -- இட்டுக்கொள்ளுதல் என்று ஒரு பொருள் கொள்ளலாம்.
ஆனால் அஞ்சனம் என்னும் வடசொல் பலருக்குப் பொருள் புரியாமல் போகலாம்
அதனால் இரண்டாம் அசையிலும் இணையான ஒரு தமிழ்ச்சொல்லை இட்டு மெருகூட்டியிருக்கவேண்டும்.
இது அடியேன் கற்பனை.
தாஸன்,
என்.வி.எஸ்
சபாஷ் ஸ்வாமின் அற்புதமான அறிவார்த்தமான விளக்கம்.பதிலின் முதல் வார்த்தை ச்ந்தோஷ மிகுதியால் என்னையும் அறியாமல் விழுந்துவிட்டது மற்றபடி தங்களை மெச்சும் அளவிற்கு நான் வ்ளரவில்லையென்பதுதான் உண்மை
"வாழ்த்த வயதில்லை" - என்று அரசியல்வாதிகள்போல்?! என்ன இது?!
வயது சரீரத்துக்குத்தான் ஆன்மாவுக்கு இல்லை.
நான், நீ என்பதெல்லாம் ஆன்மாவைத் தவிர்த்த சரீரத்துக்குப் பொருந்தாது
இப்படியிருக்க, வாழ்த்துவதற்கு வயது எதற்கு,
மனதிருந்தால் போதாதோ?!
பாடுமளவிற்கோ, பாட்டை இயற்றுமளவிற்கோ ஜ்ஞானம் இருப்பவர்கள்தான்
பாட்டை ரசிக்கவோ, பாராட்டவோ வேண்டுமென்றால்,
பாடகர்களும், கவிஞர்களும் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொள்ளவேண்டியதுதான்?!
ஒரு கவிஞன் அழகாகப் பாடினான் ....
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான்தான் என்று - அந்தப்
பொய்யில் உயிர் வாழ்வேன் -- என்று.
என்ன அற்புதமான கற்பனை?!
சிலசமயம் கொஞ்சம் பொய்கூட உபயோகித்துப் பாராட்டி உற்சாகப்படுத்தலாம்.
குறிப்பு:- தயவுசெய்து (அப்போ என்னுடைய பாராட்டு பொய் என்று எண்ணுகிறீர்களா என்று) உள் அர்த்தம் எதுவும் யோசிக்கவேண்டாம். அடியேன் யதார்த்தமாக எழுதியுள்ளேன்.
தாஸன்,
என்.வி.எஸ்
Comment